ஈசிஆர் ரோடு டூ செங்கல்பட்டு.. கிறுகிறு சோழிங்கநல்லூர்.. நாள் குறித்த தமிழக அரசு.. வேற லெவலில் சென்னை
சென்னை: விரைவில் வடகிழக்கு பருவமழை கொட்ட போகிறது.. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு இப்போது கையில் எடுத்துவிட்டது. இது தொடர்பான முக்கிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், தடுப்பரண் அமைத்தல், மின்சார கம்பங்கள் மற்றும் குடிநீர்க் குழாய்களை மாற்றியமைத்தல் குறித்த ஆய்வுகளும் நடந்துள்ளன.. அதேபோல, மாநகராட்சி பணிகளும் இப்போதே கையில் எடுக்கப்பட்டு வருகின்றன.

பருவமழை: அதுமட்டுமல்ல, நிறைய மாவட்டங்களில் இப்போதே குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்க துவங்கிவிட்டது.. வடகிழக்கு பருவமழை ஏமாற்றினால் நிலைமை இன்னும் மோசமாகும். அதனால்தான், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம் துறை, குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளிடம், அமைச்சர் நேரு தலைமையில், கடந்த வாரம் ஆலோசனை கூட்டமும் தலைமை செயலகத்தில் நடத்தப்பட்டது.
அமைச்சர் ஆய்வு: இப்படிப்பட்ட சூழலில், நெடுஞ்சாலைத்துறையின் வெள்ளத்தடுப்புப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு, அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இந்த பணிகளை எல்லாம் செப்டம்பர் 30-க்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
அப்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாநகர சாலைகள், சென்னை மெட்ரோ ஆகிய கோட்டங்களின் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாகவும், நெடுஞ்சாலைத்துறை நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகள் திருவான்மியூர் - அக்கரை ஆறுவழி சாலையாக அகலப்படுத்தும் பணி சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி, வடிகால்களில் அடைப்புகளை அகற்றும் பணி, பருவமழை முன்னெச்சரிக்கை குறித்தும் இந்த ஆய்வினை அமைச்சர் மேற்கொண்டார்.

அப்போது, வடிகால்களில் அடைப்புகளை நீக்கி மழைநீர் எளிதாக செல்ல வழிவகை செல்ல வேண்டிய பணிகளை உடனடியாக கவனம் செலுத்த வேண்டும், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒப்பந்தாரர்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும், கிழக்கு கடற்கரை சாலையில் நிலுவையில் உள்ள நிலஎடுப்புப் பணி, மின் தளவாடங்களை அகற்றும் பணி, குடிநீர்குழாய்களை அகற்றும் பணி போன்றவற்றை விரைந்து முடிக்க வேண்டும், என அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்..
ஈசிஆர்: ஈசிஆர் எனப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் நிலுவையில் உள்ள நிலஎடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மின் தளவாடங்களை அகற்றும் பணி, குடிநீர் குழாய்களை அகற்றும் பணி போன்றவற்றை தனி கவனம் செலுத்தி முடிக்க வேண்டும். நில எடுப்புப் பணிகளில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு, காலக்கெடு நிர்ணயித்து பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.
அதுமட்டுமல்ல, பெரிய மேற்கத்திய சாலை, உள்வட்ட சாலை, வளசரவாக்கம் - (ராமாபுரம் வழி) வள்ளுவர் நகர் சாலை, பல்லாவரம் பாண்ட்ஸ் கம்பெனி அருகில் கூடுதல் சிறுபால பணிகள், குரோம்பேட்டையில் கூடுதல் சிறுபால பணிகள், ஒட்டியம்பாக்கம் ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம், மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் - குடிமியாண்டி தோப்பு சாலையில் உயர்மட்ட பாலப் பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அமைச்சர் வேலு கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications