கிடுகிடு கிளாம்பாக்கம்.. சென்னையே பிஸி..மாதவரம் ரெட்டேரியில் விழுந்த நியூஸ்.. சுழலும் ஆபீசர்ஸ்.. செம
சென்னை: இந்த முறை, வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணிகள் குறித்த ஆய்வினை, தமிழக தலைமைச் செயலாளர் முன்னெடுத்துள்ளார்.
இந்த முறை வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தெரிவித்துள்ளனர்.. இதுகுறித்து அதிகாரிகள் சொன்னபோது:

வானிலை மையம்: "வழக்கமாக, தென்மேற்கு பருவமழை தமிழக பகுதியில் விலகி இருக்க வேண்டும்... கடலோர மாவட்டங்களில் கிழக்கு திசையில் இருந்து வீசும் தரைக்காற்று வலுப்பெற்று இருக்க வேண்டும்.. தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் பரவலாக மழை பெய்திருக்க வேண்டும்' என்பன போன்ற நிகழ்வுகள் அடிப்படையில்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும்.
அக்டோபர் 13 முதல் 27ம் தேதி வரையிலான நாட்களில் எப்போது பருவமழை தொடங்கினாலும் அது வழக்கமான நாளாகவே கருதப்படும்... காரணம், இன்னும் தென்மேற்கு பருவமழை விலகவில்லை. அதனால் இந்த வருடம் சற்று தாமதமாக, அதாவது அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் தகவல்: வானிலை மைய அறிவிப்பு இவ்வாறு இருந்தாலும், வடகிழக்கு பருவமழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக முன்கூட்டியே தயாராகிவிட்டது.. இதுகுறித்த ஆலோசனை கூட்டங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.. அதன்படியே, தமிழக தலைமை செயலாளர் முக்கிய அறிவுறுத்தல்களையும் அதிகாரிகளுக்கு வழங்கி வருகிறார்.
இன்றுகூட, பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும், தலைமை செயலாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தலைமை செயலாளர்: தாம்பரம் மாநகராட்சி, தாம்பரம் சானடோரியம் ஜட்ஜ் காலனியில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 464 படுக்கைகளை கொண்ட பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிக்கான கட்டுமான பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, கிழக்கு தாம்பரம், வார்டு-48க்குட்பட்ட காளிதாசர் தெருவில் தமிழ்நாடு நகர்ப்புர சாலைகள் உட்கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ். ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் 1.25 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய தார்சாலையின் தரம் மற்றும் அதன் அளவீடுகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ரெட்டேரி: அதேபோல, பருவமழைக்கு முன்னதாக மாதவரம் ரெட்டேரியில் கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மழைநீர் வடிகாலுக்கான இணைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்றும் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வலியுறுத்தியிருக்கிறார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications