வடகிழக்கு பருவமழை: தமிழ்நாட்டில் இன்று முதல் டிச. வரை 1,000 இடங்களில் ’ஞாயிறு’ மருத்துவ முகாம்கள்!
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னையில் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ50 லட்சம் நிதி உதவி வழங்கும் நிகழ்வை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் நடப்போம் நலம் பெறுவோம் எனும் திட்டம் நவம்பர் 4-ந் தேதி தொடங்கப்படும். இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

நல்நாட்கள் நிதி உதவி எனும் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 4-5 மாத கர்ப்பிணிகளுக்கு ரூ1,000; 5-6 மாதத்தில் 2-வது தவணையாக ரூ1,000, 9-வது மாதத்தில் 3-வது தவணையாக ரூ1,000 நிதி உதவி வழங்கப்படும். குழந்தை பிறந்த பின்னர் ரூ5,000 வழங்கப்படும். மொத்தம் 8,163 பேருக்கு இந்த நிதி உதவி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5,294 பேருக்கு மொத்தம் ரூ50 லட்சம் நிதி உதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்துதல் குறித்து வல்லுநர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. காப்பீடு திட்டம் குறித்த புகார்களை மருத்துவமனைகளில் மருத்துவர்களிடமே தெரிவிக்கலாம்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. ஆகையால் மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்படுகின்றன. இந்த மருத்துவ முகாம்கள் அக்டோபர் 29-ந் தேதி முதல் டிசம்பர் வரை செயல்படும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 1,000 இடங்களில் இந்த மருத்துவ முகாம் செயல்படும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

முன்னதாக 'நடப்போம்... நலம் பெறுவோம்' 8 km Health walk, பொது சுகாதாரத் திட்டங்கள் ஆகியவை துணை இயக்குனர்கள் மற்றும் நகர நல அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதனிடையே தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கின. சளி, காய்ச்சல் உள்ளவர்கள் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம். டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து 10 வாரங்கள் இந்த மருத்துவ முகாம்கள் செயல்படும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications