மேல என்னதாம்ப்பா நடக்குது.. மேலும் தாமதமாகிறதாம் வட கிழக்குப் பருவ மழை!
Recommended Video

சென்னை: வடகிழக்கு பருவமழை அடுத்த 5 நாட்களில் தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த வாரத்துடன் மூட்டை முடிச்சுகளுடன் சென்றுவிட்டது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழைக்கான சாதகமான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் மக்களும் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
எனினும் அவ்வப்போது மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக ஓரிரு நாட்கள் மழை பெய்தது. என்ற போதிலும் இது தண்ணீர் பஞ்சத்தை போக்கவில்லை.

வானிலை மையம்
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த 20 அல்லது 21- ஆம் தேதி பெய்யும் என கூறப்பட்டது. ஆனால் அதற்கான சூழல் 26-ஆம் தேதி இருக்கிறது என்று வானிலை மையம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

தொடங்கும்
அப்போது அவர் கூறுகையில் வடகிழக்கு பருவமழைக்கான காற்று தெற்கு வங்கக் கடலில் வீச தொடங்கியுள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழல் உள்ளது.

எங்கு மழை
மன்னார் வளைகுடா அருகே மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 8 செ.மீ. மழை பெய்தது. தூத்துக்குடி, வேதாரண்யம், ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழை பெய்தது.

சென்னையில் மழையில்லை
குமரி, குழித்துறை, தக்கலை மற்றும் சிவகாசி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியிருந்தது. தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகரில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications