உங்களை மறக்க மாட்டோம்.. ஸ்டாலினுக்கு நன்றி சொல்லும் வடஇந்தியர்கள்.. ஓபிசி கோட்டாவால் பெரும் வரவேற்பு
சென்னை: மருத்துவ படிப்புகளில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித ஒதுக்கீடு கிடைக்க போராடிய திமுகவிற்கும் அதன் தலைவர் முதல்வர் ஸ்டாலினுக்கும் வடஇந்தியர்கள் பலர் நன்றி தெரிவித்துள்ளனர்.
மருத்துவ படிப்புகளில் அகில் இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு அளிப்பதற்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மிக பெரிய சட்ட போராட்டத்திற்கு பின் இந்த உரிமையை உச்ச நீதிமன்றம் நிலைநாட்டி உள்ளது. மண்டல் கமிஷனின் பரிந்துரையை ஏற்று முறையான இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை திமுக உள்ளிட்ட கட்சிகள் வைத்த நிலையில் இந்த தீர்ப்பு தமிழ்நாட்டில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இது ஒரு வகையில் தமிழ்நாடு மூலம் மொத்த தேசத்திற்கும் வழங்கப்பட்ட புத்தாண்டு பரிசாக பார்க்கப்படுகிறது!

திமுக சட்ட போராட்டம்
ஒவ்வொரு வருடமும் 4000க்கும் அதிகமான பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இதனால் தங்கள் வாய்ப்புகளை இழந்தனர். மருத்துவ படிப்பில் இவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. ஆதிக்க சாதிகளின் சூழ்ச்சியால் இவர்களின் மருத்துவ கனவு பறிபோனது. இப்போது இந்த சட்டம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டு இந்த தீர்ப்பை வரவேற்று இருந்தார். இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் திமுகவின் மிக நீண்ட சட்ட போராட்டம் இருக்கிறது.

திமுக ஓபிசி இடஒதுக்கீடு
ஆம் இந்த சட்ட போராட்டத்தை தொடங்கி.. அதை வெற்றிகரமாக முடித்து வைத்தது திமுகதான். முதலில் 2019ல் ஜூலை மாதம் ஓபிசி இடஒதுக்கீடு குறித்து திமுக எம்பி பி வில்சன் மாநிலங்களவையில் பேசினார். இதுதான் திமுக போட்ட முதல் விதை. அதன்பின் நவம்பர் 1 2019 என்று இந்த ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக அப்போதைய மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு திமுக கட்சி சார்பாக கடிதம் அனுப்பப்பட்டது. பின்னர் அதே மாதம் திமுக சார்பில் மாநிலங்களவகையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அறிக்கை
இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2019லேயே வலியுறுத்தினார். பின்னர் 16.12.2019 அன்று OBC இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் பி.வில்சன் எம்.பி. பேசினார். இந்த பேச்சுதான் அப்போது தேசிய அளவில் கவனம் பெற்றது. புள்ளி விவரங்களோடு இவர் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு ஓபிசி மாணவருக்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று இவர் கூறியது போட்டோ கார்டாக மாற்றம் பெற்று வடஇந்தியா முழுக்க பரவியது. ஓபிசி பிரிவு மக்கள் இடையே இந்த பேச்சு மிக முக்கியமான கவனத்தை பெற்றதோடு மற்ற வட மாநிலங்களிலும் இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

திமுக OBC இட ஒதுக்கீடு
அதன்பின் தொடர்ந்து திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, பி வில்சன் இது குறித்து மாநிலங்களையில் கருத்து தெரிவித்து வந்தனர். பின்னர் முதல் கட்சியாக கடந்த 28.05.2020 - அகில இந்திய மருத்துவப் படிப்பில் OBC இடஒதுக்கீடு பின்பற்றப்படட் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் படி ஏறியது திமுக. திமுக கட்சி சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டதோடு, இன்னொரு பக்கம் மத்திய அரசுக்கு எதிராக திமுக தீர்மானம் கொண்டு வந்தது. திமுக சார்பாக தொடர்ந்து OBC இடஒதுக்கீடு பற்றி பேசிய அதே எம்பி வில்சன்தான் உச்ச நீதிமன்றத்திலும் வாதாடினார்.

ஸ்டாலின் OBC இட ஒதுக்கீடு
வழக்கறிஞரான இவர் தானே வாதிட்டு தொடர்ந்து இந்த வழக்கில் புள்ளிவிவரங்களோடு கூடிய முக்கிய வாதங்களை வைத்து வந்தார். இதை சென்னை உயர் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. பின்னர் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு செல்ல அங்கு மருத்துவ படிப்பில் OBC இடஒதுக்கீடு வழங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுதான் ஓபிசி வழக்கில் கிடைத்த முதல் வெற்றி. அதாவது மொத்த இந்தியாவிற்குமான தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து திமுக தொடுத்த வழக்கு காரணமாக கிடைத்தது. ஆனால் மத்திய அரசு இதை செயல்படுத்தாமல் இருந்த நிலையில்தான் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.

ஸ்டாலின் மருத்துவ படிப்பு
இந்த வழக்கில்தான் தற்போது மருத்துவ படிப்புகளில் அகில் இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த OBC இடஒதுக்கீடு வழக்கில் திமுகவின் சட்ட போராட்டம் மிக முக்கியமானது. இதன் காரணமாக தற்போது வடஇந்தியாவில் இருக்கும் OBC அமைப்புகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சங்கங்கள், பல்வேறு முற்போக்கு அரசியல் அமைப்புகள் முதல்வர் ஸ்டாலினையும், திமுகவையும் பாராட்டி வருகின்றன.

ஸ்டாலின் பாராட்டு
சமூக நீதிக்கான ஸ்டாலின் என்ற பொருள்படும் வகையில் #Stalin4SocialJustice என்ற டேக் இதனால் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. OBC இடஒதுக்கீ குறித்து வடஇந்திய தலைவர்கள் யாரும் கவலைப்படவில்லை. வடஇந்திய பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் அமைதியாக இருந்த போது ஸ்டாலின் மக்களுக்கான உரிமையை நிலைநாட்டி இருக்கிறார். அவர் ஒரு மாநில தலைவர் அல்ல.. அவர் ஒரு தேசிய தலைவர். தமிழ்நாடுதான் மக்களுக்கான உரிமையை பெற்று கொடுத்து இருக்கிறது என்று பலர் பாராட்டி உள்ளனர்.

Stalin4SocialJustice
இந்தியாவின் மிகவும் முற்போக்கான தலைவர் அவர்.ஸ்டாலினின் இந்த முயற்சிக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். வடஇந்திய தலைவர்கள் இப்போதெல்லாம் செய்ய தவறும் விஷயத்தை முதல்வர் ஸ்டாலின் செய்து இருக்கிறார், அவருக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் நன்றி என்று வடஇந்தியர்கள் பலர் இணையத்தில் #Stalin4SocialJustice டேக்கில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். நேற்று பிற்பகலில் தொடங்கிய டிரெண்ட் இப்போது வரை நீடித்து வருகிறது.

வடஇந்தியா ஸ்டாலின் பாராட்டு
நீங்கள் வட இந்தியாவை சேர்ந்தவரா.. நீங்கள் ஓபிசியா.. அப்படி என்றால் உங்களுக்கும் சேர்ந்து தமிழ்நாடு போராடி உள்ளது. ஸ்டாலினுக்கு நன்றி சொல்ல நீங்கள் மறக்க வேண்டாம் என்று மண்டல் கமிஷன் தலைவர் மண்டலின் வாரிசு திலீப் மண்டலும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசி இருக்கிறார். திமுகவின் சட்ட போராட்டம் காரணமாகத்தான் ஓபிசி ஒதுக்கீடு மருத்துவ படிப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தேசிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications