சென்னையில்.. பீகாரைச் சேர்ந்த தொழிலாளியை அரிவாளால் வெட்டி செல்போனை பறித்த கொள்ளை கும்பல்
கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து சுராஜை விரட்டி விரட்டி வெட்டியுள்ளனர்.
சென்னை: சென்னையில் வட மாநில இளைஞரை தாக்கி செல்போன் பறித்த கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதை போன்ற வீடியோக்களை பகிர்ந்தவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, பீகார் பாஜகவின் சமூக ஊடகப்பிரிவினர்தான் அதிக அளவில் இந்த பொய் செய்திகளை பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதில் பணிபுரியும் நபர்கள் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எல்லாவற்றும் மேலாக, வட மாநிலத்தவர்கள் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது ஒரு பக்கம் என்றால் கொள்ளை கும்பலால் வட மாநில இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் சுராஜ் குமார் (26). பீகாரை சேர்ந்தவரான இவர், நேற்று இரவு பணி முடித்துவிட்டு நண்பர்களுடன் தான் தங்கியிருக்கும் இடத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கடப்பேறியை சேர்ந்த சிலர், அவர்களை வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் இருந்த 2 செல்போன்களை அந்த கும்பல் பறித்ததாக கூறப்படுகிறது. இதை சுராஜ் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து சுராஜை விரட்டி விரட்டி வெட்டியுள்ளனர். இதில் சுராஜின் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் அவர்கள் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான ரவுடிகளை தேடி வருகின்றனர்.
-
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications