"வட மாநில இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ போலியானது".. டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் சமூக வலைதளங்களில் பரவும் 2 வீடியோக்களும் போலியானது என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை: சமூக வலைதளங்களில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல 2 வீடியோக்கள் பரவி வருகின்றன. அந்த 2 வீடியோக்களும் தவறானவை, போலியானவை. இரு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களை திரித்து வெளியிடப்பட்டு இருக்கின்றன என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் வேலை தேடி வரும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இப்படி வரும் வட மாநில தொழிலாளர்கள் பற்றிய உரிய தரவுகள் இல்லாததால், ஒரு சிலர் இங்கு வந்து குற்ற செயல்களிலும் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. அதேபோல வட மாநில தொழிலாளர்களினால் இங்குள்ள வேலை வாய்ப்பு பறிக்கப்படுவதாகவும் பரவலாக சமூக வலைத்தளங்களிலும் சிலர் பதிவிடுவதை காண முடிகிறது.

பீகார் இளைஞர்கள்
இது தொடர்பான பேச்சுக்கள் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் ஓடும் ரயிலில் வட மாநில தொழிலாளியை ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக வட மாநில தொழிலாளியை தாக்கிய நபரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து காவல்துறை கைது செய்து தக்க நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், தமிழகத்தில் பணி புரியும் பீகார் இளைஞர்கள் உள்ளூர் மக்களால் தாக்கப்படுவது போல இரண்டு வீடியோக்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

வேகமாக பரவிய வீடியோ
குறிப்பாக வட மாநிலங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோவை பார்க்கும் வட மாநிலத்தவர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்து இருந்தது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூட இது தொடர்பாக தனது ட்விட் பதிவில் கவலை தெரிவித்து இருந்தார். நிதிஷ் குமார் தனது ட்விட் பதிவில் கூறுகையில், "தென் மாநிலத்திற்கு வாழ்வாதாரத்தை தேடி வரும் பீகாரை சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தமிழக அதிகாரிகளுடன் பேசி உறுதி செய்யுமாறு பீகார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்" என்று பதிவிட்டு இருந்தார்.

இரு வீடியோவும் போலியானவை
இந்த நிலையில், தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:- சமூக வலைதளங்களில் 2 போலி வீடியோக்கள் பரவி வருகின்றன. பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல அந்த வீடியோக்கள் காட்டப்பட்டுள்ளன. அந்த வீடியோக்கள் தவறானவை, போலியானவை. இரு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களை திரித்து வெளியிடப்பட்டு இருக்கின்றன.

போலியான வீடியோக்களை பரப்ப வேண்டாம்
இந்த இரு வீடியோக்களில் ஒன்று திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் இரு பிரிவாக மோதிக்கொண்டதுடன் தொடர்புடையது ஆகும். இன்னொன்று கோவையில் உள்ளூர் மக்கள் மோதிக் கொண்ட வீடியோ ஆகும். இதுதான் உண்மை . தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications