North Korea: வடகொரிய அதிபர் தேர்தல்: கிம் ஜாங் உன்னிற்கு எதிராக விழுந்த 0.07% வாக்குகள்.. என்ன ஆகப்போறாங்களோ?
சென்னை: வடகொரிய அதிபர் தேர்தலில் கிம் ஜாங் அன் 99.93 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவர் மட்டுமே போட்டியிட்ட சூழலில், மாற்றி ஓட்டு போட்ட 0.07 சதவீதம் பேர் யாராக இருக்கும்.. எங்களுக்கே அவுங்களை பார்க்கனும் போல இருக்கே என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
வடகொரியாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அதிபராக இருக்க கூடிய கிம் ஜாங் உன் 99.93 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார். வடகொரியாவில் தொழிலாளர் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக அரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது.

வாக்களிக்காத 0.07 சதவீதம் பேர் யார்?
15 வது மக்கள் சபையை தேர்வு செய்ய இந்த வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. 99.93 சதவீதம் பேர் கிம் ஜாங் அனுக்கு வாக்களித்தார்கள் என்பதில் எல்லாம் ஆச்சர்யம் இல்லை. வாக்களிக்காத அந்த 0.07 சதவீதம் யாராக இருக்கும் என்பதே சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. வடகொரியாவை பொறுத்தவரை அங்கு சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்கு என்ன நடக்கிறது என்பது அந்த நாட்டு மக்களுக்கே வெளிச்சம். நாட்டையே திறந்த வெளி சிறை போல வைத்து இருக்கும் கிம் ஜாங் அன், போடும் உத்தரவை யாராவது மீறினால் அடுத்து என்ன நடக்கும் என்றே தெரியாது. வீட்டில் டிவியில் என்ன பார்க்க வேண்டும். உடை எப்படி உடுத்த வேண்டும். சிகை அலங்காரம் எப்படி இருக்க வேண்டும் என்பது வரை கிம் ஜாங் உன் போட்ட உத்தரவுப்படியே நடக்கும்.
நெட்டிசன்கள் கருத்து
இதில் ஏதாவது மாறினால் மரண தண்டனை வரை கூட விதிக்கப்படுமாம். தேர்தலில் கூட சம்பிரதயாத்திற்காகவே நடப்பதால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிட முடியாது. ஆனாலும் அனைத்து மக்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். இப்படி இருக்கும் நிலையில், வடகொரிய அதிபர் தேர்தலில் கிம் ஜாங் அன்னுக்கு வாக்களிக்காத அந்த 0.7 சதவீதம் பேர் யாராக இருக்கும்.. எங்களுக்கே அவுங்களை பார்க்கனும் போல இருக்கே என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
0.0037 சதவீதம் பேர் வெளிநாடுகளில் இருப்பதால் வாக்களிக்கவில்லை. வாக்களித்தவர்களில் 99.93 சதவீதம் பேர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 0.07 சதவீதம் பேர் எதிராக வாக்களித்துள்ளனர். இது வடகொரியா தேர்தல்களில் அரிதாகக் காணப்படும் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாகும்.
வடகொரியா தேர்தல் சட்டங்கள்
வடகொரியாவின் தேர்தல் சட்டங்களின் படி, தொழிலாளர்கள், விவசாயிகள், நிபுணர்கள், சேவைப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட மொத்தம் 687 பிரதிநிதிகள் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே போட்டியிடுவதால் இது வெறும் சம்பிராதய வாக்குப்பதிவு என்று வெளிநாட்டு பார்வையாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
மேலும், 1957க்கு பின்னர் முதல் முறையாக உச்ச மக்கள் சபைத் தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் பதிவாகியுள்ளது. இதை அந்த நாட்டு ஊடகமே அறிவித்துள்ளது. தற்போது அந்த 0.07 சதவீதம் பேரின் கதி என்ன ஆகுமோ என தெரியவில்லை என்று நெட்டிசன்கள் காமெடியாகவும், வேதனையுடனும் சமூக வலைத்தளங்களில் பதிவிட தொடங்கியுள்ளனர்.
நெட்டிசன் ஒருவர் கூறுகையில், வடகொரிய மக்கள் தொகையில் 0.07 சதவீதம் குறைய உள்ளது என்று பதிவிட்டார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில் வடகொரியாவில் அதிகம் தேடப்படும் நபராக 0.07 சதவீதம் பேரும் இருப்பார்கள் என்று பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications