Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனைவரும் எங்கள் தொழிலாளர்கள்..வதந்தி பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள்..முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புபவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புபவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். வதந்தி பரப்புவோர் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என்றும் புலம்பெயர் தொழிலாளர்களை வைத்து சிலர் கீழ்த்தரமாக அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் வதந்தி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றனர். பீகார் அதிகாரிகள் குழு தமிழ்நாடு வர உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் மேற்கொண்டார். வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் அறிவுரை வழங்கினார்.

North state workers attack Rumor spreaders are against the country CM Stalin condemns

தமிழ்நாடு முழுவதும் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கட்டிட தொழில், ஹோட்டல் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சிவகாசி போன்ற நகரங்களில் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. வெவ்வேறு மாநிலங்களில் நடந்த சம்பவங்களை எல்லாம் திருப்பூரில் நடந்ததாக தொகுத்து தகவல் பரப்பப்படுகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தனி உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

North state workers attack Rumor spreaders are against the country CM Stalin condemns

இந்த நிலையில் வதந்தி பரப்புபவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டுக்கே எதிரானவர்கள் என்றும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பவர் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சமீபகாலமாக வேலை வாய்ப்புத் தேடி அனைத்து மாநில தொழிலாளர்களும் தமிழ்நாட்டுக்கு வருவது அதிகரித்து வருகிறது. அவ்வாறு வரும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளும், தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய சலுகைகளையும், பாதுகாப்பையும் தமிழ்நாடு அரசு செய்து தருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இப்படி வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம். இந்த அமைதிமிகு சூழ்நிலையைக் காணப் பொறுக்காத சிலர், அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில், தமிழ் மக்களின் பண்பாட்டினை அவமதிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு. சில குறுமதியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது. இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் இங்கு நிலவும் இயல்பான சூழ்நிலை தெரியும். அதனால்தான், தற்போதும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தொழிலாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், தமிழ்நாட்டில் நடைபெற்றதாக படங்களையும் வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள். இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து, இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. வடமாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும்அடைய வேண்டாம். அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தினால் காவல் துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தகவல் தாருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

North state workers attack Rumor spreaders are against the country CM Stalin condemns

இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் அரணாக இந்த அரசும், தமிழ்நாட்டு மக்களும் இருப்பார்கள் என்பதை இங்குள்ள தொழிலாளர் சகோதரர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்வதோடு, தவறான செய்திகளின் அடிப்படையில் நீங்கள் எவரும் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு. இது தொடர்பாக நான் பேசி இருக்கிறேன். அனைத்துத் தொழிலாளர்களும், எங்கள் தொழிலாளர்கள் என்பதையும், எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருபவர்கள் என்பதையும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இங்கு நேராது என்பதையும் அவருக்கு உறுதியாகச் சொல்லி இருக்கிறேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+