ஓட்டலில் ஷாக்..சென்னையில் இளைஞர்களுக்கு கட்டையால் அடி! கும்பலாக சேர்ந்து அடித்த வடமாநில தொழிலாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அண்ணா சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் சாப்பிட வந்த வாடிக்கையாளர்களை வட மாநில தொழிலாளர்கள் கும்பலாக சேர்ந்து கரண்டி கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிய சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றார். உணவகங்கள் கட்டுமான தொழில் உள்ளிட்டவற்றில் வேலை செய்வதற்காக ஆயிரக்கணக்கானோர் தமிழகத்திற்கு நாள்தோறும் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

North state workers who attacked youths in a restaurant in Chennai

சென்னை, கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வட மாநில தொழிலாளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக வதந்திகள் பரவின.

வடமாநில தொழிலாளர்கள்: மேலும் வட மாநில தொழிலாளர் தமிழர்களை தாக்குவதாகவும் வீடியோ பரவிய நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக வதந்தி பரப்பியவர்களை கைது செய்தனர் காவல்துறையினர். இந்த நிலையில் தற்போது வட மாநில தொழிலாளர்கள் சென்னையில் சாப்பிட சென்ற வாடிக்கையாளர்களை தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொடூர தாக்குதல்: சென்னை அண்ணா சாலையில் உள்ளபெரிய மசூதி எதிரே அருகே ஹோட்டல் சங்கம் என்ற பெயரில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்தில் நேற்று இரவு இரண்டு வாடிக்கையாளர்கள் சாப்பிட சென்றனர். அப்போது இருக்கை பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர்களை வேறு இருக்கையில் அமரச் செய்யுமாறு உணவகத்தின் உரிமையாளர் கூறியுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் இளைஞர்களை வேறு இடத்தில் அமருமாறு சொன்னதாக கூறப்படுகிறது.

இளைஞர்களுக்கு காயம்: இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அது மோதலாக மாறியது. இதனையடுத்து வடமாநில தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து சென்னையைச் சேர்ந்த அந்த இரண்டு இளைஞர்களை கரண்டி கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதனால் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிர்ச்சி வீடியோ: இந்த நிலையில் தற்போது வட மாநில தொழிலாளர்கள் சென்னையைச் சேர்ந்த இளைஞர்களை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இளைஞர்களை வட மாநில தொழிலாளர்கள் கொடூரமாக தாக்கும் காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+