சென்னையே ரெடியாயிருச்சு.. வேற லெவலில் மாநகராட்சி.. திடீர்னு கிளம்பி போன ராதாகிருஷ்ணன்.. செம ஸ்பீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி, சென்னை மாநகராட்சி ஜரூர் வேகத்தில் தயாராகி உள்ளது.. இது சென்னைவாசிகளுக்கு நிம்மதியை தந்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை முடிந்துள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது.. இதனால், தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது.. எனினும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பேயே, அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தவாறே இருந்தது.

Northeast Monsoon and 446 disaster rescue vehicles on standby in Chennai, says J Radhakrishnan IAS

முதல்வர் ஸ்டாலின்: இது சம்பந்தமான ஆய்வு கூட்டங்களையும் முதல்வர் நடத்தியிருந்தார்.. பருவமழைக்கு முன்பேயே அனைத்து நடவடிக்கைளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.

இதற்கு பிறகு, வழகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை அடிக்கடி மேற்கொண்டபடியே இருந்தார். மேலும், சென்னையின் பல்வேறு இடங்களுக்கு சென்று நேரடி ஆய்வுகளிலும் ஈடுபட்டு, அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கினார். குறிப்பாக, 446 பேரிடர் மீட்பு வாகனங்களை தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

பருவமழை: அந்தவகையில், சென்னை நகரில் ஆங்காங்கே தேங்கும் மழை நீரை அகற்றுவதற்காக உயர்திறன் கொண்ட டீசல் இன்ஜின் மோட்டார் பம்புகள், எலக்ட்ரிக்கல் நீர்மூழ்கி மோட்டார் பம்புகள், பல்வேறு குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பம்புகள், டிராக்டர்களுடன் கூடிய மோட்டார் பம்புகள் என 845 மோட்டார் பம்புகள் சென்னை, ராயப்பேட்டை, லாயட்ஸ் காலனியில் செயல்பட்டு வரும் உர்பேசர் சுமீத் பணிமனை வளாகத்தில் தயாராக வைக்கப்பட்டிருக்கின்றன.
மாநகராட்சி சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இந்த 446 பேரிடர் மீட்பு வாகனங்களையும், இயந்திரங்களையும், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தற்போது ஆய்வு செய்துள்ளார்..

Northeast Monsoon and 446 disaster rescue vehicles on standby in Chennai, says J Radhakrishnan IAS

ஆய்வுகள்: அதுமட்டுமல்ல, மரம் அறுக்கும் இயந்திரங்கள், கையால் இயக்கப்படும் மர அறுவை கருவிகள், டெலஸ்கோபிக் புரூனர், கார்பேஜ் சக்கர வாகனங்கள், ஆம்பிபியன் சூப்பர் சக்கர வாகனங்கள், ஜேசிபி இயந்திரங்கள், பாப்காட் இயந்திரங்கள், ரோபோடிக் பலவகைப் பயன்பாடு இயந்திரங்களும், தயார் நிலையில் உள்ளதால், அவைகளையும் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

பருவமழை தொடங்கிவிட்டதால், எந்நேரமும் விழிப்புணர்வுடனும், கவனத்துடனும் பணியாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார். மழைக்காலம் துவங்கிவிட்ட நிலையில், சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வரும் பணிகள் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+