நெக்ஸ்ட் வீக் வெளுத்து வாங்கும் மழை.. இன்று முதல் வெள்ளோட்டம்.. சென்னைக்கு நார்வே மையம் அறிவிப்பு
Recommended Video
சென்னை: சென்னையில் அடுத்த வாரம் 19-ஆம் தேதி கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக மழையில்லை. இதனால் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதையடுத்து தண்ணீர் பிரச்சினை விண்ணை முட்டும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தது. குறைந்த அளவிலான மழை என்றாலும் கோடை வெப்பத்தை தணித்தது.

தமிழகத்தில் மழை
இந்த நிலையில் நேற்று சென்னையில் கிண்டி, வளசரவாக்கம், ராமாபுரம், தியாகராய நகர், வளசரவாக்கம், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், மடிப்பாக்கம், போரூர் உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அது போல் வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கன மழை பெய்தது.

நள்ளிரவு
இந்த நிலையில் இதுகுறித்து நார்வே வானிலை மையம் சென்னைக்கு ஒரு இனிப்பான தகவலை கூறியுள்ளது. அதாவது சென்னையில் இன்று மாலை முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை மழை நீடிக்கும். நாளை நள்ளிரவு கனமழை பெய்யும்.

மிதமான மழை
அதுபோல் திங்கள்கிழமை மாலை மழை பெய்யும். இது செவ்வாய்க்கிழமையும் தொடரும். இது போல் புதன்கிழமையும் லேசான மழை பெய்யும். வியாழக்கிழமை மாலையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.

நல்லதொரு செய்தி
அது போல் வெள்ளிக்கிழமை கனமழை பெய்யும். இது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழையில்லாமல் தண்ணீரும் இல்லாமல் அல்லாடி வரும் மக்களுக்கு நல்லதொரு செய்தியை நார்வே கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications