ஹய்யா பசங்களா? நார்வேல இருந்து குட்நியூஸ் வந்திருக்கு.. 2-ஆம் தேதி வரை சென்னையில் மழையாம்.. ஜாலியா!
Recommended Video
சென்னை: நாளை முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை சென்னையில் நல்ல மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை அந்தந்த மாநிலங்கள், கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு நன்றாக பெய்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது.
ஆனால் வடகிழக்கு பருவமழை மட்டும் சில ஆண்டுகள் சூப்பராகவும் சில ஆண்டுகள் சுமாராகவும் பெய்கிறது.

வறட்சி
கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னை உள்பட தமிழகத்தின் எந்த பகுதிகளிலும் அந்தளவுக்கு மழையை பார்க்க முடியவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் வறட்சிதான் மிஞ்சுகிறது.

நள்ளிரவு முதல் நல்ல மழை
இந்த முறையாவது நல்ல மழை பெய்யும் என எதிர்பார்த்திருந்த வேளையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பிரேக் எடுத்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து பருவமழை மீண்டும் தீவிரமான நிலையில் சென்னை மற்றும் புறநகர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் நள்ளிரவு முதல் நல்ல மழை பெய்தது.

நார்வே வானிலை அறிக்கை
இதுகுறித்து நார்வே வானிலை மையம் கூறுகையில் நாளை வெள்ளிக்கிழமை சென்னையில் கனமழை பெய்யும். அது போல் அடுத்த நாளான சனிக்கிழமையும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை லேசானது முதல் கனமழை வரை பெய்யும்.

டிசம்பர் 2-ஆம் தேதி வரை
அது போல் திங்கள்கிழமையும் லேசானது முதல் கனமழை பெய்யும். அதன் பிறகு செவ்வாய்க்கிழமை மழை ஏதும் இல்லை. அதாவது நாளை முதல் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வரை லேசானது முதல் கனமழை வரை பெய்யும் என நார்வே வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications