நாளை முதல் நவ.17 வரை சென்னையில் விடாது கனமழை.. நார்வே வானிலை மையம்
சென்னை: சென்னையில் நாளையும் நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இது புயலாக மாறாது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரு தினங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மக்கள் அவதி
இதனால் சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது. மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் நாளையும் நாளை மறுநாளும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் மழை குறித்து நார்வே வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மிதமான மழை
இன்று மாலையும் இரவு நேரத்தில் மிதமானது முதல் கனமழை பெய்யும். அது போல் நாளையும் நாளை மறுநாளும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது போல் வரும் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் சென்னையில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.

நார்வே வானிலை மையம்
இதற்கு அடுத்த நாள் வரும் சனிக்கிழமை மாலை லேசான மழையும் இரவு நேரத்தில் கனமழையும் பெய்யும். நவம்பர் 14 ஆம் தேதி காலையில் மிதமான மழையும் மதியம் லேசான மழையும் மாலையும் இரவும் மிக கனமழையும் பெய்யும். நவம்பர் 15, 16, 17 ஆம் தேதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

காற்றழுத்த தாழ்வு நிலை
வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் மேலும் சில காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். ஏற்கெனவே நீர் நிலைகள் நிரம்பி சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் நீரானது வீணாக கடலில் சென்று கலக்கிறது. அடுத்த மழைக்குள் தமிழகத்தில் தண்ணீர் தேங்காதவாறு தரமான சாலைகளையும் மழைநீர் வடிகால்களையும் அரசு ஏற்படுத்த வேண்டும்.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications