நார்வேயிலிருந்து வந்தாச்சு வெதர் ரிப்போர்ட்.. சென்னையில் ஒரு வாரம் மழை பெய்யுமாம்!
Recommended Video
சென்னை: நாளை முதல் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரை சென்னையில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இந்த நிலையில் சென்னையிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனமழை பெய்துவந்தது.
இந்த நிலையில் அரபிக் கடலில் கியார் என்ற புயலும் கன்னியாகுமரி கடல் பகுதியில் மஹா என்ற புயலும் உருவானது. இந்த நிலையில் வங்கக் கடலில் புல் புல் என்ற புயல் உருவாகி அது மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்தது. மஹா புயல் குஜராத்தை நோக்கியும் மஹார் புயல் ஓமனை நோக்கியும் சென்றுவிட்டது.

பிரேக் எடுத்த மழை
இதனால் தமிழகத்தில் சென்னை உள்பட ஒரு சில இடங்களில் மழை பிரேக் எடுத்துக் கொண்டது. இந்த நிலையில் அடுத்தது மழை எப்போது என்று எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். கடந்த ஆண்டுகளை போல் பருவமழை பொய்த்து விட்டால் வரும் கோடையில் தண்ணீரை தேடி அலையும் சூழல் ஏற்படும் என்பதால் மழையை எதிர்பார்க்கின்றனர் இல்லத்தரசிகள்.

மழை பெய்யும்
இதுகுறித்து நார்வே வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் நாளை சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு. அது போல் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் ஓரளவுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.

நல்ல மழை
சில இடங்களில் வெயிலும் இன்னும் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும் காணப்படும். அது போல் திங்கள்கிழமையும் லேசான மழை பெய்யும். ஆனால் செவ்வாய்க்கிழமை நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அறிக்கை
புதன்கிழமையும் நல்ல மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும். வியாழக்கிழமையும் இதே போல் மழை பெய்யும். வெள்ளிக்கிழமை அதாவது 22-ஆம் தேதி லேசான மழை பெய்துவிட்டு பின்னர் குறைந்துவிடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications