ஒரு சொட்டு மழைநீர் வீணாகாது.. சிந்திக்குமா தமிழக அரசு? மக்களைக் கவரும் பலே ஐடியா
சென்னை: ஒரு சொட்டுகூட வீணாகாமல் மழை நீரை எப்படிச் சேமிக்கலாம் என்பதை குஜராத் மாநிலம் நடைமுறைப்படுத்தும் திட்டங்களைக் கையில் எடுத்துள்ளது. அந்த யோசனையை தமிழக அரசும் பின்பற்றினால் பல விதங்களில் மாநிலம் பலன் பெறும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
தென்மேற்கு பருவமழை காலத்தில் சராசரியாக 314 மிமீட்டர் மழை பெய்கிறது. வடகிழக்கு பருவ மழையின்போது 459மிமீட்டர் மழை கிடைக்கிறது. தமிழக அதிகபட்சமாக வடகிழக்கு பருவ மழையைத்தான் நம்பி இருக்கிறது. மழைக்காலங்களைத் தவிர்த்துக் குளிர் காலத்தில் கூட தமிழகத்திற்கு மழை கிடைக்கிறது. அதன் அளவு 37 மிமீட்டர். இதில் ஆச்சரியம் என்னவெனில் கோடைக்காலங்களில் 128மிமீட்டர் மழையை தமிழகம் பெறுகிறது. ஆக ஆண்டுக்கு ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை சராசரியாக 939.7 மிமீட்டர் மழையை தமிழ்நாடு பெறுகிறது.

இந்தப் புள்ளிவிவரங்களில் மாற்றங்கள் இருக்கலாம். தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு 914 மி.மீட்டர் என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் என்கிறார். ஆனால், இந்த மழை நீரை நாம் எந்தளவுக்குப் பயன்படுத்துகிறோம்? சேமிக்கிறோம் என்பது மிக முக்கியமான கேள்வி. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மழைநீர் சேமிப்பைக் கட்டாயமாக்கினார். அது ஒரு சிறந்த திட்டமாக உலகம் முழுக்க கவனம் பெற்றது. அதனால் தமிழகத்தின் நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டது. ஆனால், இப்படி தொலைநோக்கு திட்டத்தை அமல்படுத்திய அவரது ஆட்சிக்காலத்தில்தான் சென்னை செயற்கையா மூழ்கியது. அரசின் கவனக்குறைவால் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து ஒட்டுமொத்த சென்னை மக்களின் வாழ்வாதாரத்தையே அழித்தது.
நீர் மேலாண்மை பற்றிய புரிதலில் நாம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்பதற்கான சான்றுகள் இவை என்கிறார் எம்.ஐ.டி.எஸ் முன்னாள் பேராசிரியரும் நீர்நிலை நிபுணருமான ஜனகராஜன். அவர், "2015 வரலாறு காணாத வெள்ளம் என்றோம். 20 ஆயிரம் கோடி சேதம் எனக் கணக்கிட்டோம். 2016 இல் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. இது ஏன்? நீர்வழி பாதைகள் முழுக்க ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. அதான் முக்கிய காரணம். பள்ளிக்கரணையில் சதுப்புநிலம் மொத்தம் 5,500 ஹெக்டர். இப்போது எவ்வளவு உள்ளது தெரியுமா?
அளவை மீறி மழை பெய்வதால் அதற்குப் பெயர் வெள்ளம் இல்லை. நீர்த் தேக்கம். நீர் வெளியேறும் பாதைகள் அடைபட்டதால் வந்த தேக்கம். சென்னையில் ஏற்படுவது வெள்ளம் இல்லை. நீர் வெளியேற முடியாமல் ஏற்படும் தேக்கம். இது எங்கே நடக்கிறது? மாம்பலம், நுங்கம்பாக்கம், முடிச்சூர், வேளச்சேரி எனக் குறிப்பிட்ட பகுதிகளில்தான் நடக்கிறது" என்கிறார்.
ஒரு துளியும் மழைநீர் வீணாகாமல் அதை நம்மால் சேமிக்க முடியாதா? அதற்கான சில முயற்சிகளைச் சென்னை பெருநகர மாநகராட்சி இப்போது செய்து வருகிறது. வில்லிவாக்கம் ஏரியை சிறப்பாக மாற்றியுள்ளனர். சென்னையில் புதியதாக 3 ஏரிகளை உருவாக்கி வருகிறது மாநகராட்சி. ஆனால், இவை போதுமானவையாக இல்லை. கூவம் ஆறு மழைக்காலங்களில் மட்டுமே கவனம் பெறும் விசயமாக இருக்கிறது. தமிழக அரசு அதைச் சுத்தம் செய்வதற்காகச் செலவிடப்பட்ட நிதியில் ஊழல் நடந்துள்ளதாக கார்த்தி சிதம்பரம், எல்.முருகன் கூறிவருகின்றனர். அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள்.
மத்திய அரசும் தன் பங்காக ஜல் சஞ்சய், ஜன் பகிதாரி (JSJB) ஆகிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. நிலத்தடி நீரை உயர்த்தவும், மழை நீரைச் சேமிக்கவும், குளம், குட்டைகளைத் தூர்வாரி பாதுகாக்கவும் இத்திட்டம் நிதி அளித்து வருகிறது. "ஜேஎஸ்ஜேபி முன்முயற்சியின் முக்கிய நோக்கம்,நீர் பாதுகாப்புதான். அதற்காகக் கூட்டாகச் சேர்ந்து மக்கள் உழைக்க வேண்டும்" என்கிறார் ஜல் சக்தி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர்.
கடந்த மாதம் சூரத்தில் ஜல் சஞ்சய், ஜன் பகிதாரி ஆகிய திட்டங்களின் கீழ் தொடங்கப்பட்ட வேலைகள் குஜராத்தில் ஒரு வெற்றியை அளித்துள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மழைநீரைப் பிடித்துச் சேமிக்கக் குறைந்தபட்சம் 5 ரீசார்ஜ் குளங்களை உருவாக்குவதை உறுதி செய்துள்ளது. மாநகராட்சிகள் தங்கள் பகுதிகளில் குறைந்தபட்சம் 10,000 ரீசார்ஜ் ஏரி அல்லது குளக் கட்டமைப்புகளை நிறுவ இத்திட்டம் உத்வேகம் அளித்துள்ளது.

இதன்படி அடுத்த ஆண்டு பெய்ய உள்ள பருவமழைக்கு முன் முழுவதும் சுமார் 80,000 மழைநீர் சேகரிப்பு குளங்களை அமைக்க குஜராத் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்தக் குளங்களின் வெறுமனே குழி வெட்டி அதில் நீரைச் சேகரிக்காமல், குளத்தில் அடிப்பகுதியில் மிகப்பிரம்மாண்டமான பிளாஸ்டிக் தார்ப்பாய்களை விரித்துக் கட்டி அதைக் கரை பகுதிவரை வலுவாக நட்டு அதனுள் நீரைச் சேமிக்க புதிய யோசனையை முன்வைத்துள்ளது. இதனால் நீரை மண் உறிஞ்சிக் கொள்வது தடுக்கப்படுகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார் அரசுகளும் இதேபோன்ற முன்னெடுப்பைத் தொடங்கி உள்ளன. விரைவில் அதற்கான பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
மத்திய அரசின் இந்தத் திட்டத்தினை பயன்படுத்தி சென்னை மற்றும் தமிழக சுற்றுவட்டாரங்களில் இதைப் போன செயற்கை ஏரிகளை உருவாக்கி அதில் மழை நீரைச் சேமித்தால் தமிழகம் பல மடங்கு பயன்பெறும்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications