செங்கோட்டையன் மீது தவறில்லை.. அமித்ஷாவின் ஆசையும் அதுதான்.. எடப்பாடியை விமர்சித்த குருமூர்த்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கோட்டையன் வீசிய சரவெடி அதிமுகவுக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பிரிந்த தலைவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார். இந்நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேசியுள்ள குருமூர்த்தி, அனைவரும் ஒன்றிணைவது அதிமுகவுக்கு நல்லது என்று எடப்பாடிக்கு தெரியும், அவருக்கு நல்லதா இல்லையா என்று யோசிக்கிறார். அதில் எனக்கு அவருடன் கருத்து வேறுபாடு உள்ளது என்று நேரடியாக எடப்பாடியை விமர்சித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. திமுக கூட்டணி தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. மறுபக்கம் அதிமுக - பாஜக கூட்டணியில் அடுத்தடுத்து நெருக்கடிகள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் வெளியேறிவிட்டனர்.

nothing-wrong-with-sengottaiyan-problem-is-with-edappadi-only-says-gurumoorthy

செங்கோட்டையன் கெடு

சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் உள்ளிட்ட பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. ஈரோடு மாவட்ட கோபிசெட்டிப்பாளையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுகவுக்கு தென் மாவட்டம், டெல்டா பகுதிகளில் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. தற்போது அதிமுக வலுவாக உள்ள கொங்கு மண்டலத்தில் இருந்தும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி சூழ்ந்துள்ளது. இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் பின்னணியில் பாஜக, ஆடிட்டர் குருமூர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

செங்கோட்டையன் மீது தவறில்லை

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் குருமூர்த்தி, "செங்கோட்டையன் குரல் கலகக்குரல் இல்லை. செங்கோட்டையன் மீது எந்தத் தவறும் இல்லை. அவர எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எந்த கருத்தும் பதிவு செய்யவில்லை. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பது எப்படி கலகம் ஆகும். அனைவரும் உங்கள் தலைமையில் இணைய வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு பெருமை தானே.

அதில் எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அதற்காக செங்கோட்டையனை எதற்கு தவறு சொல்ல வேண்டும். எடப்பாடியை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட, அவரை ஏற்றுக் கொண்டு பணியாற்றினால் கட்சிக்கு நல்லது என்று சொல்வது தவறில்லை. உங்களை ஏற்றுக் கொள்ளதவரை கட்சியில் சேர்த்து கொண்டு, அவருக்கு அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்று கூறினால் தான் தவறு.

எடப்பாடி மீது விமர்சனம்

செங்கோட்டையன் சொல்லி எடப்பாடி கேட்பாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். அனைவரும் சேர்ந்தால் கட்சிக்கு நல்லது என்பது எடப்பாடிக்கே தெரியும். தனக்கு நல்லதா இல்லையா என்பதைத்தான் அவர் யோசிக்கிறார். அதில்தான் எனக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இவர்கள் சேர வேண்டும் என்று தான் அமித்ஷா நினைக்கிறார். அதுகுறித்து பாஜகவினருக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்". என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+