முன்பு வீட்டின் கதவை உடைத்து திருடுனாங்க..இப்போ செல்போன் மூலமாக எல்லாம் நடக்குது..டிஜிபி வார்னிங்!

முன்பு வீட்டிற்கு வந்து கதவை உடைத்து திருடினார்கள். ஆனால் இப்போது போன் மூலமாகவே எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுகின்றனர் என்று டிஜிபி சைலேந்திர பாபு பேசியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்பு வீட்டிற்கு வந்து கதவை உடைத்து திருடினார்கள். ஆனால் இப்போது நவீன காலத்தில் போன் மூலமாகவே எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுகின்றனர் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு சென்னை எத்திராஜ் கல்லூரியில் பேசியுள்ளார்.

சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சைபைர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சைலேந்திர பாபு பேசியதாவது:-

போன் மூலமாகவே எல்லாவற்றையும்..

போன் மூலமாகவே எல்லாவற்றையும்..

தற்போதைய நவீன காலத்தில் சைபர் கிரைம் மற்றும் அது குறித்த பாதுகாப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம் மிக்க ஒன்றாகும். முன்பு வீட்டிற்கு வந்து கதவை உடைத்து திருடினார்கள். ஆனால் இப்போது நவீன காலத்தில் போன் மூலமாகவே எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுகின்றனர். மோசடியான சாப்ட்வேர்களில் நிறைய பேர் பணம், பொருள் மற்றும் தகவல்களை இழந்து விடுகின்றனர்.

லிங்க் என்றாலே அது ஆபத்துதான்

லிங்க் என்றாலே அது ஆபத்துதான்

சைபர் பாதுகாப்பு நன்றாக இருக்க வேண்டும் எனில் மாணவர்களாகிய நீங்கள் அதை நன்றாக படிக்க வேண்டும். லிங்க் என்றாலே அது ஆபத்துதான். எனவே அதுபற்றிய விழிப்புணர்வு அவசியம். தமிழ்நாட்டில் காவல் உதவி என்ற செயலியை தமிழ்நாடு காவல்துறை செயல்படுத்தி வருகிறது. அதில் 66 வகையான பாதுகாப்பு வசதிகள் உள்ளன. ஆனால் அதைக்கூட பலரும் இன்னும் டவுன் லோடு செய்யவில்லை. உங்களுக்கு ஆபத்து என்றால் டச் பண்ணினால் போதும் பக்கத்தில் இருக்கும் காவல்துறையினர் வந்து காப்பாற்றுவார்கள்.

கோடி ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்

கோடி ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்

சீனாவில் 5 கோடி ஹேக்கர்கள் இருக்கின்றனர். நமது நாட்டிற்கு அதிக பயிற்ச்சி பெற்ற கணினி மென்பொறியாளர்கள் வல்லுனர்கள் தேவைப்படுவார்கள். தேவைப்படுகிறது. அதை நீங்கள் கற்றுக்கொண்டால் கோடி ரூபாய் வரை சம்பளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உலகில் மிகப்பெரிய சொத்து என்பது படிப்பை விட வேறு எதுவும் கிடையாது. நீங்கள் இளமையாக உள்ளீர்கள். அதுவே உங்களுக்கான மிகப்பெரிய சொத்து. இளமையில் நல்ல விஷயங்கள் அனைத்தையும் கற்க வேண்டும்.

முழுமையாக பயன்படுத்த வேண்டும்

முழுமையாக பயன்படுத்த வேண்டும்

'ஹெலன் கெல்லர்' பல அருமையான புத்தங்கள் எழுதியிருக்கிறர். அவருக்கு கண் தெரியாது, காது கேட்காது, வாய் பேச முடியாது. வாழ்க்கை என்பது மாபெரும் சாகசம், அது சாகசம் என்று நினைக்க அதில் ஒன்றுமே இல்லை. ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அதை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+