Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகளுக்கு செக்.. இனி விவசாயத்திலும் "இதற்கெல்லாம்" வருமான வரி உண்டு.. நிர்மலா அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய வருமான வரி சட்டத்தில் விவசாய துறையில் பல பிரிவுகளுக்கு வருமான வரி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி சட்டத்தில் பல புதிய வரிகள் விவசாய துறையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இப்போது இந்தியாவில் விவசாயத்திற்கு வரி இல்லை. பல கோடி வருமானம் வந்தாலும் வரி இல்லை. இதன் மூலம் வரி விலக்குகளையும் பெற முடியும். உதாரணமாக தோனி விவசாயத்தில் முதலீடு செய்தார். விவசாயம் செய்கிறார். உள்ளூர் சந்தையில் தனது பொருட்களை விற்கிறார். விவசாய வருமானத்திற்கு பூஜ்ஜிய வரி. கூடுதலாக, மானியங்களை பெறுவார்.

budget 2025 budget nirmala sitharaman 2025 2025

ஆனால் புதிய வருமான வரி சட்டத்தில் விவசாய துறையில் பல பிரிவுகளுக்கு வருமான வரி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

நிலத்தில் சாகுபடி: வரி விலக்கு உள்ளது, ஆனால் இனி விவசாய நடவடிக்கைகளை சரிபார்க்க கடுமையான ஆவணங்கள் தேவை. அதாவது நீங்கள் விவசாயம்தான் செய்கிறீர்கள்.. நீங்கள் வைத்து இருப்பது விவசாய நிலம்தான் என்பதை உறுதி செய்ய கடுமையான ஆவண சரிபார்ப்பு செய்யப்படும்.

விவசாய நிலத்திலிருந்து வாடகை அல்லது வருவாய்: நகர்ப்புறங்களில் விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுப்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் இனி வரிவிதிப்புக்கு உட்பட்டது.

விவசாய உற்பத்தி வரி: மதிப்பு கூட்டு முறையில் ஒரு பொருளை விற்று அதன் மூலம் வருவாய் ஈட்டினால் அதற்கு வரி உண்டு.

நர்சரி செயல்பாடுகளின் வருமானம்: பாரம்பரிய நர்சரி செயல்பாடுகள் மூலம் வரும் வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் வணிக நர்சரிகளுக்கு வரி விதிக்கப்படுகிறது.

பால் பண்ணையிலிருந்து வருமானம்: பால், கோழி மற்றும் மீன்வள வருமானம் இப்போது முழு வரிக்கு உட்பட்டது, விவசாய வருமானமாக கருதப்படுவதில்லை.

விவசாயம் சார்ந்த தொழில்கள்: தற்போது உள்ள வரிச் சலுகைகள் புதிய சட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளன, சிறிய அளவிலான விவசாயத் தொழில்கள் பலன்களைத் தக்கவைத்துக் கொள்ளும். அதே வேளையில் பெரிய விவசாய வணிகங்கள் இனி அதிக வரிகளை எதிர்கொள்ளும்.


வருமான வரி சட்டம்

'வருமான வரி மசோதா 2025' என அழைக்கப்படும் புதிய வருமான வரி மசோதா, ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. நேற்று இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961, மொத்தம் 298 பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த புதிய I-T மசோதாவில் இது 536 உட்பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது, தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961க்குப் பதிலாக கொண்டுவரப்படும். மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, இது 'வருமான வரிச் சட்டம், 2025’ என்று அழைக்கப்படும்.

'மதிப்பீட்டு ஆண்டு', 'நிதி ஆண்டு' மற்றும் 'முந்தைய ஆண்டு' ஆகிய வார்த்தைகளை 'வரி ஆண்டு' என்ற ஒரு என்று மாற்றும். வரி ஆண்டு என்று ஏப்ரல் 1, 2026 முதல் 12 மாத நிதிக் காலத்தை கொண்டது ஆகும். இதன் வரைவு மசோதா தற்போது வெளியாகி உள்ளது. இந்த மசோதா 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகள் (மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு பிரிவுகளாக மாறும்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+