கை வைத்தால் பணம் அனுப்பிடலாம்.. யுபிஐ-யில் வருது செம வசதி! ”ஜி பே” யூஸ் பண்ணுறவங்களுக்கு குட் நியூஸ்
சென்னை: யுபிஐயில் பயனர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை தேசிய கொடுப்பணவு கழகம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இனி பிங்கர் பிரிண்ட் வசதியை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஆறு அல்லது 4 இலக்க பாஸ்வேர்டு உள்ளிட்ட பிறகே பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த நிலையில்தான் பிங்கர் பிரிண்ட், முக அடையாளம் வைத்தே பணப்பரிவர்த்தனை செய்யும் வகையில் வசதி மேம்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. கையில் பணம் வைத்துக்கொண்டு சென்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது என சொல்லும் அளவுக்கு தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துவிட்டது. அதிலும் யுபிஐ வந்த பிறகு 5 ரூபய்க்கு பிஸ்கட் வாங்கினால் கூட கையில் காசாக கொடுக்காமல் யுபிஐ வழியாகவே சில நொடிகளில் பணத்தை செலுத்தி விடுகிறார்கள்.

யுபிஐ பரிவர்த்தனை
பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை யுபிஐ மூலமே பணம் செலுத்திவிட முடியும். வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட யுபிஐ மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்தினால் ஒரு சில வினாடிகளில் நாம் செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்திவிடலாம். இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அவ்வப்போது புதிய விதிகளை செயல்படுத்த உள்ளது.
அந்த வகையில் வரும் 1 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன. யுபிஐ கணக்கில் பேலன்ஸ் செக் செய்வதை இனி ஒருநாளைக்கு 50 முறைதான் மேற்கோள்ள முடியும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது யுபிஐயில் பயனர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை தேசிய கொடுப்பணவு கழகம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைரேகை, முக அடையாளம்
அதாவது, இனி பிங்கர் பிரிண்ட் வசதியை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஆறு அல்லது 4 இலக்க பாஸ்வேர்டு உள்ளிட்ட பிறகே பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த நிலையில்தான் பிங்கர் பிரிண்ட் எனப்படும் கைரேகை, முக அடையாளம் வைத்தே பணப்பரிவர்த்தனை செய்யும் வகையில் விரைவில் வசதி மேம்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பின் நம்பரை ஆப்ஷனாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த வசதி பயன்பாட்டுக்க்கு வந்தால் விரைவில் உங்கள் கை ரேகை வைத்தால் போதும் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். யுபிஐ பரிவர்த்தனைகளில் மோசடியை குறைக்கும் விதமாக இந்த வசதியை கொண்டு வர என்பிசிஐ திட்டமிட்டுள்ளது. தற்போது இருக்கும் பின் எண் காரணமாக யுபிஐ பரிவர்த்தனையில் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்கிறது.
கொஞ்சம் சிரமம் அளிப்பதாக
அதுபோக டிஜிட்டல் பரிவர்த்தனையில் அதிகம் பரிட்சயம் இல்லாதவரக்ளுக்கு கொஞ்சம் சிரமம் அளிப்பதாக இருக்கிறது. குறிப்பாக ஊரக பகுதிகளில் உள்ளவர்களுக்கும் வயதானவர்களுக்கும் யுபிஐ பின் எண் பயன்படுத்தி பரிவர்த்தனையில் சில சிரமங்கள் உள்ளதால், இதனை களையும் விதமாக இந்த புதிய வசதி கொண்டு வரப்பட உள்ளது.
யுபிஐ பரிவர்த்தனையில் முக அடையாளம், பிங்கர் பிரிண்ட் பயன்படுத்தி பணம் செலுத்தலாம் என்ற வசதி கொண்டு வரப்படும் பட்சத்தில் பெரிய அளவில் பயனளிக்கும் என்று அத்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக்கொள்ள சிரமப்படுபவர்களுக்கு இந்த கைரேகை வைக்கும் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றுதெரிவித்தனர்.
மோசடிகளை தவிர்க்க
அதே போல, மோசடிகளை தவிர்க்கவும் பயோமெட்ரிக் வசதி உதவும் எனவும் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த யோசனை இன்னும் பரிசீலனையில் உள்ளது. உருதி செய்யப்படவில்லை. ஒருவேளை, கைரேகை, முக அடையாளம் வைத்து பண பரிவர்த்தனை செய்யும் வசதி கொண்டு வரப்பட்டால், அதற்கான உரிய உள்கட்டமைப்புகளை என்.பிசிஐ மேற்கொள்ளும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications