ரூ. 5 கோடி பணம் வசூல் பண்ணியிருக்காங்க.. விலகிய நாதக நிர்வாகிகள் குற்றச்சாட்டுக்கு சீமான் பதிலடி!
சென்னை: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில், அவர்களின் குற்றச்சாட்டுகள் பற்றி பேசியுள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். மேலும், தாலியை வைத்து கட்சி நடத்திய நபரை கூட்டி வாருங்கள் என செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார் சீமான்.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கரு.பிரபாகரன் தலைமையில் செய்தியாளர்களைச் சந்தித்து, "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாவட்ட நிர்வாகிகளோடு எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். இத்தனை வருடங்கள் ஆகியும் ஒரு எம்எல்ஏ கூட பெறமுடியவில்லை" என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர்.

நாங்கள் கஷ்டப்படுகிறோம். தாலியை அடகு வைத்து கட்சி நடத்தினோம். சீமான் வீட்டில் 15 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள், அவர் சொகுசாக வாழ்கிறார் என பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வைத்திருந்தனர். மேலும், கட்சியை விட்டு விலகுவதாகவும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட வடக்கு செயலாளர் அபூ.சுகுமார், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். நான் செய்வதைத்தான் செய்வேன், யாரும் என்னை கேள்விக் கேட்க கூடாது, இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று சீமான் பேசியதால், அவரது நிலைப்பாட்டை கண்டித்து விலகுவதாக சுகுமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது நிர்வாகிகள் விலகல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், "கட்சி மீது அதிருப்தியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எப்போதும் இருப்பதுதான். திடீரென்று அவர்களுக்கு அதிருப்தி வரும். அவர்களுக்கு திருப்தி இருக்கிற இடங்களுக்கு போய் சேர்ந்துகொள்ள வேண்டியதுதான். இது ஒரு பெரிய சிக்கலே கிடையாது. இதனால் நாட்டுக்கும், மக்களுக்கும் பெரிய பிரச்சனை கிடையாது.
தாலியை அடகு வைத்து கட்சிக்கு பாடுபட்ட ஒருவரை கொண்டு வாருங்கள். அந்தக் குற்றச்சாட்டு சொன்னவர் யார்? கட்சிப் பேரை சொல்லி ரூ.5 கோடி காசு வசூல் செய்திருக்கிறார்கள். என்னுடைய முகத்திற்காக, காசு கொடுத்தவர்கள் வழக்கு தொடராமல் இருக்கிறார்கள். அதை வெளியில் சொன்னால் என் தகுதிக்கு, தரத்துக்கு அழகா?
ஒரு வளர்ந்து வரும் கட்சிக்குள் இதுபோன்ற சின்னச் சின்ன பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் இதையெல்லாம் ஒரு பெரிய பிரச்சனையாக நினைக்கக்கூடாது. இது என்னுடைய கட்சி பிரச்சனை, என் பிரச்சனை. இதில் நாட்டுக்கும், மக்களுக்கும் பிரச்சனை கிடையாது" என்று கூறியுள்ளார் சீமான்.
-
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications