Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வக்பு சட்டத்தை எதிர்த்து நாதக ஆர்ப்பாட்டம்! நிர்மலா- சீமான் சந்திப்பு என்ற தகவலுக்கு இடையே அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பாஜக அரசு நிறைவேற்றிய வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 13 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரைச் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் பரபரத்தன. ஆனால், இந்தச் சந்திப்பு நடக்கவில்லை என சீமான் மறுத்துள்ளார். இந்நிலையில், பாஜக அரசின் வக்பு சட்டத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி.

NTK Chief Seeman Announces Protest on 13th Against Waqf Board Amendment Act

நாதக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "இஸ்லாமியப் பெருமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி வலுக்கட்டாயமாக இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு வாரியச் சட்டத்திருத்த முன்வரைவினை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 13-04-2024 அன்று காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்குமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார்.

ஒருங்கிணைந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் சார்பாக சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு திடல் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், வரும் 13 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது" என அறிவிக்கப்பட்டுள்ளது.

வக்பு சட்டம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃபு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு மசோதா மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையில் காரசார விவாதம் நடைபெற்றது. இறுதியாக நள்ளிரவில் நடைபெற்ற வாக்கெடுப்பில், ஆதரவாக 128 பேரும், எதிராக 95 பேரும் வாக்கு பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, வக்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

வக்பு மசோதா தொடர்பான வாக்கெடுப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சியினரின் நிலைப்பாடு குறித்து விவாதம் எழுந்துள்ளது. ராஜ்ய சபாவில் திமுக, அதிமுக உள்ளிட்ட இரு முக்கிய கட்சிகளும் எதிர்த்தே வாக்களித்தனர். ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜிகே வாசன் மட்டும் ஆதரவாக வாக்களித்தார். அதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வக்ஃபு வாரிய திருத்த மசோதா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

சீமான் விமர்சனம்

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த வக்ஃபு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாமகவும் ஆதரவு தெரிவித்தது. ஆனால் நாடாளுமன்றத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்த்து வாக்களிக்காமல் புறக்கணித்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வக்ஃபு வாரிய திருத்த மசோதா விவகாரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் ஆதரவாக வாக்களித்திருக்கிறார். பாஜக கூட்டணியில் இருப்பதால், அது அவர்களின் நிலைப்பாடு.

அதேபோல் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறுவதும் மத்திய அரசுக்கு ஆதரவாகவே சென்றுவிடும். அதாவது நாடாளுமன்றத்தில் நடுநிலை, வெளியேற்றம் என்பது அந்த கருத்துக்கு ஆதரவாகவே கணக்கில் எடுத்து கொள்ளப்படும். வக்ஃபு வாரிய மசோதாவுக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே, அது எதிர்ப்பு என்று கணக்கில் கொள்வார்கள். அதனால் ஜிகே வாசன் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது தவறான முடிவாகும். அந்த முடிவை ஜிகே வாசன் ஏன் எடுத்தார் என்று தெரியவில்லை.

நாட்டில் அவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது, வக்ஃபு வாரிய இடங்களை வைத்து அரசியல் செய்வது சரியல்ல. இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதால், இந்துக்களின் வாக்குகளை தன் பக்கம் குவிக்கும் என்றால், அது அரசாட்சி முறைக்கு அழகல்ல" என்று விமர்சித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+