பாஜகவை சீமான் விமர்சிப்பதில்லை.. பெரியாரின் வெங்காயம் செய்தது என்ன தெரியுமா? திருமாவளவன் பதிலடி!
சென்னை: பெரியாரின் வெங்காயம் தான் 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சனாதன சக்திகளை நுழையவிடாமல் தடுத்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெரியாரை விமர்சிக்கும் சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர், பாஜகவை விமர்சிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே பெரியாரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஏற்கனவே சீமானின் கருத்துகளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து சீமான் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, பெரியார் வைத்திருப்பது வெங்காயம். என் தலைவன் வைத்திருப்பது வெடிகுண்டு. பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது, நான் வெடிகுண்டு வீசுவேன் என்று பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
அதில் திருமாவளவன் பேசுகையில், பரபரப்புக்காக சீமான் ஏதேதோ பேசுகிறார். இது கருத்தியல் பொருத்தமோ, அரசியல் பொருத்தமோ, காலப் பொருத்தமோ இல்லாத ஒன்று. கவன ஈர்ப்புக்காக, பரபரப்புக்காக தன்னை நம்பி வரும் இளைஞர்களை, அரசியல் பயணத்திற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பேசி கொண்டிருக்கிறார்.
பெரியாரின் வெங்காயம் தான் காங்கிரஸ் ஆட்சியை தமிழ்நாட்டில் முடிவுக்கு கொண்டு வந்தது. அந்த வெங்காயம் தான் 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சனாதன சக்திகளை வேரூன்ற விடாமல் காத்து கொண்டிருக்கிறது. அதே வெங்காயம் தான் சனாதன சக்திகளை இங்கு நுழையவிடாமல் விரட்டியடித்து கொண்டிருக்கிறது. இதனை சீமான் புரிந்து கொள்ள வேண்டும்.
பெரியார் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் இந்திய அளவில் சமூக நிதியின் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்குமான தலைவர். சர்வதேச அளவில் அறிவியல்பூர்வமான அனைத்தையும் அணுகக் கூடிய ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கை அளிக்க கூடிய தலைவர். அவரை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. இதனை அவர் கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் பேசவும், விவாதிக்கப்படவும் உள்ளது. வக்ஃப் வாரிய மசோதாவை கொண்டு வந்துள்ள பாஜக பற்றி சீமான் பேசவில்லை. சிறுபான்மையினரை தொடர்ந்து அச்சுறுத்தக் கூடிய மத்திய அரசை பற்றி பேசவில்லை. தலித் மக்களுக்கு எதிரான படுகொலையை பற்றி பேசுவதில்லை. தமிழீழ விடுதலை அரசியலையும், தமிழ்நாட்டு உரிமை அரசியலையும் இணைத்து பேசுவது பொருத்தமில்லாதது என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications