"வட மாநிலத்தவர் மேல் ஏன் திடீர் பாசம்! தமிழர்கள் குறித்து திட்டமிட்டு போலி தகவல்!" சீமான் புது ஆடியோ
வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் சீமான் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை: வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் குறிப்பிட்ட சிலர் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இதற்கிடையே நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாகத் தொடர்ந்து பொய்யான தகவல்களைச் சிலர் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று இரு மாநிலங்களும் தொடர்ந்து விளக்கமளித்து வருகிறது.
இதற்கிடையே இதுபோன்ற பதற்றங்கள் அதிகரிக்க நாம் தமிழர் சீமானும் காரணம் என்று ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதற்கிடையே இது தொடர்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சீமான்
சீமான் அந்த ஆடியோவில் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார். சீமான் அந்த ஆடியோவில், "வட மாநிலங்களில் இருந்து வருகிற தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதி (inner line permit) வழங்க வேண்டும் என்று அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வட கிழக்கு மாநிலங்களில் ஏற்கனவே இந்த முறை இருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து வருவோரின் தரவுகளை அரசு சேகரித்து வைத்திருக்க வேண்டும்.

நாம் தாக்கவில்லை
அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.. என்ன வேலைக்கு வருகிறார்? எங்கே வேலை செய்கிறார்கள்.. எங்கே தங்கப் போகிறார்கள்.. எவ்வளவு காலம் இங்குத் தங்கியிருப்பார் என்ற பதிவுகள் அரசிடம் இருந்தால்தான் குற்றச் செயல்கள் குறையும்.. அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்குப் பல உதாரணங்கள் இருக்கவே செய்கின்றனர். நாம் எந்தவொரு வட மாநில தொழிலாளர்களையும் தாக்கவில்லை அவர்கள்தான் நம்மைத் தாக்கியுள்ளனர்..

பொய்யான தகவல்
அதை விட்டுவிட்டு தமிழர்கள் வன்முறையாளர்கள் என்றும் தமிழர் தாக்குகிறார்கள் என்று சொல்கிறார்கள்.. தமிழர்கள் சோம்பேறிகள், உழைக்க மாட்டார்கள், என்று அவமானப்படுத்துவது வருத்தத்தை அளிக்கிறது.. வட மாநிலத்தவர்கள் வரும் முன்பு இங்கு எந்த தொழிலும் நடக்கவில்லையா? அப்போது யாரும் ஹோட்டல் நடத்தவில்லையா.. சாலைகள் போடவில்லையா.. யாரும் விவசாயம் செய்யாமலா இருந்தோம்.. கடந்த 5 ஆண்டுகளில் தானே இதெல்லாம் நடந்தது. அதற்கு முன்பு இது நாம் எப்படி இருந்தோம்.

பொய்யான தகவல்
மற்றவர்கள் வந்து வேலை செய்தால் கொடுக்கும் நிலை இருக்கிறது என்று சொல்வதே அவமானகரமானது. வட இந்தியர்கள் இல்லை என்றால் தமிழகத்தில் வேலையே நடக்காது என்பது போலச் சொல்லி வருகிறார்கள். தமிழர்கள் சோம்பேறிகள், வேலை செய்ய மாட்டார்கள், குடித்துவிட்டு போதையில் இருப்பார்கள் என்கிறார்கள். அப்படியானால் குடித்துவிட்டு போதையில் இருப்பவர்களை நோக்கித் தானே நாம் இதைக் கேட்க வேண்டும். அவர்களை நோக்கி எந்தவொரு கேள்வியும் கேட்காமல். தமிழர்கள் வன்முறையாளர்கள் என்று மட்டும் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்.

ஏன் இந்த திடீர் பாசம்
பொய்களைப் பரப்பி வருகிறார்கள்... வட இந்தியர்கள் மீது ஏன் இந்த திடீர் பாசம்? வரட்டும் வேலை செய்யட்டும் கிளம்பட்டும். அங்குச் சென்று வேலை செய்யட்டும். அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் எனது வாழ்வுரிமை பறிபோய்விடும். ஓட்டுரிமை கொடுத்தால் எனது நாட்டுரிமை பறிபோகும். நிலமற்ற நபராகி அடித்துவிரட்டப்படுவேன். இமயம் வரை பரவியிருந்த தமிழர்கள் இந்த பகுதிக்குள் சுருங்க வேண்டிய நிலை ஏன் வந்தது என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நமக்கான நிலத்தை நாம் இழந்தால் நாம் அடிமையாகிவிடுவோம்.. இதுதான் கோட்பாடு.. நிலமற்ற இனம் அவமானகரமானது.

யாரும் குரல் கொடுக்கவில்லை
எதுவரை மொழி நீள்கிறதோ அதுவரை உனது இடம்.. எதுவரை மொழி வாழ்கிறதோ அதுவரை உனது இனம். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் திட்டமிட்டு வன்முறையாளர்கள் என்று பொய் பரப்புகிறார்கள். வட இந்தியர்கள் மீது இப்போது என்ன திடீர் பாசம். தமிழர்கள் மீது வெளியே தாக்குதல் நடத்தும் போது யாருமே குரல் கொடுக்கவில்லையே.. மற்ற மாநிலங்களில் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் இதை உறுதி செய்யத் தமிழகம் எதாவது குழு அனுப்பியுள்ளதா.. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும் ஆளும் கட்சியான பிறகு ஒரு நிலைப்பாடும் எடுத்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்
வட இந்தியர்களை உள்ளே நுழைத்து.. அவர்களை பாஜக வாக்காளர்களாக மாற்ற முயல்வதாகவும் இதை ஒருபோதும் திமுக அனுமதிக்காது என்று ஸ்டாலினே பேசியுள்ளார்.. அதே ஸ்டாலின், இப்போது வட இந்தியர்கள் மீது கை வைத்தால் எந்த கொம்பனாலும் அடக்குவோம் என்று சொல்கிறார்... வரலாறு முழுக்க இதுதான் நடந்தது. இலங்கையில்தான் இதுதான் நடந்தது... ஆதிக்குடிகள் யார் என்பதிலே இங்குப் பிரச்சினை நடக்கிறது... நமது அண்டை மாநிலமே நமக்கான நீரைத் தருவதில்லை.. நீர் உரிமையைக் கேட்டால் சொந்த நாட்டிலேயே கர்நாடகாவில் தமிழர்களுக்கு என்ன நிலை,, அப்போதெல்லாம் ஏன் யாருமே பேசுவதில்லை" என்றார்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications