திருவள்ளுவர் நாளில் சென்னையில் இறைச்சிக் கூடங்களை மூடுவது 'ஆரியத்தனம்'- சீமான் கண்டனம்
சென்னை: திருவள்ளுவர் நாளில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சிக் கூடங்களை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் எவ்விதப் பகுத்தறிவுக்கும் இடம் அளிக்காத இது போன்ற உத்தரவுகளை அடிக்கடிப் பிறப்பித்துப் பின் எதிர்ப்புகள் எழுந்த பிறகு திரும்பப் பெறுகின்ற ஆழம் பார்க்கும் ஆரியத்தனத்தினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை: திருவள்ளுவர் நாளினை முன்னிட்டு இன்று 15.01.2025, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் இயங்கக்கூடிய இறைச்சிக் கூடங்களை மூட வேண்டும் என்கின்ற சென்னை மாநகராட்சியின் உத்தரவு கண்டிக்கத்தக்கது.

வள்ளுவனின் பாக்களைப் படித்துத் தெளிந்த தமிழ்ச் சமூகம் சூழலுக்கு ஏற்ப அவற்றைத் தங்கள் வாழ்வியலில் பின்பற்றி வள்ளுவத்தைக் காலந்தோறும் போற்றி வருகிறது. வள்ளுவத்தையும் தனிமனித உணவு விருப்பத்தையும் எவ்வித முரணுக்கும் இடமின்றிக் கடைபிடித்து வரும் தமிழர்களின் நடுவில், வள்ளுவரைத் தன்வயப்படுத்த முயற்சி எடுத்துத் தோற்று நிற்கும் சனாதன சக்திகளின் நோக்கத்திற்கு வழிவகை செய்வது போலத் தற்போதைய தமிழ்நாடு அரசின் அறிவிப்பு உள்ளது. இறைச்சிக் கடைகளை ஒருபுறம் மூடினாலும் இணைய வழி உணவு சேவைகளின் வழியே இறைச்சி உணவுகளை மக்கள் பெற முடியும் என்பது எளிய முறையில் வணிகம் நடத்தும் வியாபாரிகள் மீது தொடுக்கப்படும் தடையாகவும் பார்க்க வேண்டி உள்ளது.
திருவள்ளுவர் நாளில் இறைச்சிக் கடை மூடல் என்பது 1980ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் வழியே தொடர்வதாக அரசு "தகவல் சரிபார்ப்பகம்" எனும் தன்னுடைய அமைப்புகளின் வழியாக காரணம் கூறுவதை விட்டுவிட்டு இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனை முறை திராவிட மாடல் ஆட்சி அமைந்தது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சனாதனக் கோட்பாட்டைப் பின்பற்றும் இதுபோன்ற அறிவிப்புகளை அதிமுக அரசு முன்மொழிந்து தொடர்ந்தாலும் அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு ஒரு முறை கூட வரவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
எவ்விதப் பகுத்தறிவுக்கும் இடம் அளிக்காத இது போன்ற உத்தரவுகளை அடிக்கடிப் பிறப்பித்துப் பின் எதிர்ப்புகள் எழுந்த பிறகு திரும்பப் பெறுகின்ற ஆழம் பார்க்கும் ஆரியத்தனத்தினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனவும், தற்போதைய சென்னை மாநகராட்சியின் உத்தரவினால் இறைச்சிக் கடை வியாபாரிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications