சொந்த ஊரில் களமிறங்கும் சீமான்.. சஸ்பென்ஸ் வைக்கும் நாதக.. இம்முறை சட்டசபை போவது நிச்சயம்?
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இம்முறை சொந்த மாவட்டமான சிவகங்கையில் உள்ள காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதற்கேற்ப சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மற்ற 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்ட சீமான், காரைக்குடி தொகுதிக்கு மட்டும் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் 4 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிவித்து அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் காரைக்குடி தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

இதனால் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்ட கடலூர் மற்றும் திருவொற்றியூர் தொகுதியில் சீமான் வெற்றிபெறவில்லை. இம்முறை எப்படியாவது சட்டசபை சென்றுவிட வேண்டும் என்பதில் சீமான் உறுதியாக இருக்கிறார்.
தற்போது விஜய்யும் போட்டிக்கு வந்துள்ளதால், சீமான் கூடுதல் தீவிரம் காட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசிய போது, இந்த சட்டசபைத் தேர்தல் சொந்த மண்ணில் போட்டியிடுவேன் என்று கூறி இருந்தார். சீமான் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான்.
மானாமதுரை தொகுதியில் உள்ள அரணையூரில் பிறந்தவர் சீமான். மானாமதுரை தனித்தொகுதி என்பதால், சீமான் அங்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லை. இதனால் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதனை சிவகங்கை மாவட்ட நாம் தமிழர் கட்சியினரும் சூசகமாக பேசி தொடங்கியுள்ளனர்.
அதேபோல் காரைக்குடி தொகுதி பாரம்பரிய காங்கிரஸ் தொகுதியாகும். திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி 5 முறை இதே தொகுதியில் வென்றுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளதால், பாஜகவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மறுபக்கம் தவெக நிர்வாகி பிரபு கடந்த ஓராண்டாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனால் திமுக மற்றும் அதிமுக அதிருப்தியாளர்கள் சீமானை ஆதரிக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் திமுக மற்றும் அதிமுகவின் வாக்குகளை தவெக பிரிக்கும் பட்சத்தில், அது சீமானுக்கு பயன் கொடுக்கும் என்றும் கருதப்படுகிறது. இதனால் விரைவில் காரைக்குடி தொகுதி வேட்பாளராக சீமான் தன்னை தானே அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications