"நம்பர் 2".. எடப்பாடிக்கு சிக்கலாக மாற போகும் எண்.. பின்னாடி இவ்வளவு நடக்குதா? எல்லாம் போச்சு?
சென்னை: அதிமுகவில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலை நிலவும் நிலையில் கட்சியில் மாற்றங்கள் ஏற்படுத்தும் சில முயற்சிகள் நடந்து வருகின்றனவாம்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.

அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
விரும்பவில்லை: இந்த நிலையில்தான் அதிமுகவில் சிலர் எடப்பாடியின் செயலை, அவர் எடுக்கும் முடிவுகளை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
எடப்பாடிதான்.. தன்னை அதிமுகவின் முகமாக முன்னிறுத்துகிறார். தனக்கு போட்டியாக இருந்தவர்களை வெளியே அனுப்பியது அவர்தான். அப்படி இருக்க.. இப்போது தான் மட்டும் தனியாக பிரச்சாரம் செய்தேன்.. அதிமுக சார்பில் நான் மட்டுமே பிரசாரம் செய்தேன். தேமுதிக சார்பில் பிரேமலதா பிரசாரம் செய்தார் என்று சொல்வது ஏன்? ஜெயலலிதா இப்படி தனியாகவே பிரச்சாரம் செய்வார். அவர் அதிமுகவை வெற்றிபெற வைக்கவில்லையா? ஓ பி எஸ் போன்று கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களை வெளியே அனுப்பிய பின் எப்படி வெற்றி கிடைக்கும் என்று கட்சிக்கு உள்ளேயே நிர்வாகிகள் பேச தொடங்கி உள்ளனராம்.
அதிமுக தோல்விக்கு என்ன காரணம்: 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது. அதிமுகவின் தோல்விக்கு பின் வரும் காரணங்கள் உள்ளன. அதிமுக கட்சி பல விதமாக பிரிந்தது. ஓபிஎஸ் தரப்பு, டிடிவி தரப்பு தென் மண்டலங்களில் , டெல்டாவில் வாக்குகளை பிரிக்கின்றனர். இவர்களை இணைக்க வேண்டும். அதிமுகவில் வேட்பாளர் தேர்வு சொதப்பல். பல தொகுதிகளில் உள்ளூர் ஆட்களுக்கே தெரியாதவர்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். சில இடங்களில் வெளியூர் ஆட்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். கல்லை கூட ஜெயிக்க வைக்க எடப்பாடி ஒன்றும் ஜெயலலிதா இல்லையே.
அதிமுகவில் நிர்வாகிகளே பெரிதாக வேலை செய்யவில்லை. பெரிதாக தேர்தலுக்காக களமிறங்கி பணிகளை செய்யவில்லை. பொதுவாக நாடாளுமன்ற தேர்தல் மத்தியில் ஆட்சியை தேர்வு செய்வது. அப்படி இருக்க பிரதமர் வேட்பாளர் இல்லாமல் அதிமுக என்ன சொல்லி வாக்கு கேட்கும். பெரிய கூட்டணியை அமைக்காமல் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது. எடப்பாடியின் பிரச்சாரம் பெரிதாக எடுபடவில்லை. அவரின் பிரச்சாரம் பெரிதாக கொங்கில் கூட மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.
கட்சியில் தேர்தல் செலவிற்கான பணம் கூட சரியாக செலவாகவில்லை. நிர்வாகிகள் மூலம் பணம் பெரிய அளவில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது, என்று அதிமுகவில் கூறி வருகின்றனர்.
கட்சியில் மாற்றங்கள்: அதிமுகவில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலை நிலவும் நிலையில் கட்சியில் மாற்றங்கள் ஏற்படுத்தும் சில முயற்சிகள் நடந்து வருகின்றனவாம். அதன்படி அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை இழுக்க சசிகலா - ஓபிஎஸ் ஆகியோர் முயன்று வருகிறார்களாம்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, புரட்சி தலைவருக்கு பின் அம்மாவும் நானும் பல இன்னல்களை சந்தித்து, மிகப்பெரிய இயக்கமாக அதிமுகவை கட்டமைத்தோம்
ஆனால் இன்று அதிமுக தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருகிறது. ஒருசில சுயநலவாதிகள் கட்சியை இந்த அளவிற்கு எடுத்துச்சென்றுள்ளனர், என்று கூறி இருந்தார்.
சசிகலா - ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான சிலர் அளித்த தகவலில், அதிமுகவில் நம்பர் 2 ஆக இருக்கும் நபர்களை தூக்க திட்டங்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக பொதுக்குழுவில் முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ள 2ம் கட்ட தலைவர்களை தட்டி தூக்கும் வேலைகளை இவர்கள் ஏற்கனவே எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக சசிகலா உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications