கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்! ஆதவ் அர்ஜுனா நேரில் ஆதரவு!
சென்னை: தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 1500 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், நேற்று நள்ளிரவில் 700 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள், திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியின் படி, தங்கள் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல்முறையீட்டை கைவிட்டு, செவிலியர்களுக்கு வேலைக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்றும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும் என்றும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணி செய்து, பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும், பட்டப்படிப்பு மற்றும் பட்டம் மேற்படிப்பு முடித்த செயலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் எனவும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து நேற்று இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். மாலை 6 மணி ஆனதை தொடர்ந்து செவிலியர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் செவிலியர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், கிளாம்பாக்கம் அருகே பேருந்தில் அழைத்து சென்று விடுவித்தனர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி நள்ளிரவு நேரத்திலும் செவிலியர் பெண்களின் போராட்ட களத்தில் @AadhavArjuna @CTR_Nirmalkumar pic.twitter.com/2J2gfuDby3 pic.twitter.com/z7bWdmgH05
— priya (@PriyankaSmile01) December 19, 2025
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நள்ளிரவில் தர்னாவில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து போராட்ட களத்திற்கு வந்த தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, செவிலியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
போராட்டம் நள்ளிரவு வரை நீடித்த நிலையில், செவிலியர்களை கைது செய்த போலீசார் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்திருக்கின்றனர்.
-
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
தமிழக பள்ளிக்குள் சாதி, மத அடையாளங்களுக்கு இடமில்லை.. நேரடியாகவே சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்! -
101 தவெக எம்எல்ஏக்களுக்கு ரூல்ஸ் சொல்லி கொடுக்கணும்..முதல் முறை வென்ற 145 பேருக்கு 2 நாள் பயிற்சி -
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து? மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு! -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications