கைவிரித்த ஹைகோர்ட்.. கலங்கிய ஓபிஎஸ்.. ஆதரவாளர்களுடன் பரபரப்பு ஆலோசனை.. அடுத்த அஸ்திரம் என்ன?
சென்னை: அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கைவிரித்துவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மிகவும் தீவிரமாக இருக்கிறது. சட்டசபையில் திமுகவை ஓபிஎஸ் புகழ்ந்தது, அவரது மகன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது உள்ளிட்ட காரணங்களால் ஓபிஎஸ்ஸுடனான இரட்டை தலைமை வேண்டாம் என நிர்வாகிகள் விரும்புகிறார்கள்.
இந்த நிலையில் கட்சியை எந்தவிதத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என ஓபிஎஸ் விரும்புகிறார். இதற்காக தொடர்ந்து போராடி வருகிறார். கடந்த முறை பொதுக் குழு நடந்த போது கோர்ட் கதவுகளை தட்டினார்.

தோல்வி
ஒரு வகையில் அவருக்கு தோல்வி கிடைத்தாலும் ஓபிஎஸ் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்த தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் கொண்டு வரக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு கடந்த 23 ஆம் தேதி கூடியது. அப்போது 23 தீர்மானங்களையும் பொதுக் குழு நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

பொதுக் குழு
அத்துடன் பொதுக் குழுவுக்கு வந்தது முதல் ஓபிஎஸ் எடப்பாடி தரப்பினரால் அவமானப்படுத்தப்பட்டார். இதையடுத்து ஓபிஎஸ் டெல்லிக்கு சென்றார். அங்கு பிரதமரை சந்திக்க முயற்சித்தார். ஆனாலும் நேரம் கிடைக்கவில்லை. இதையடுத்து நேராக சென்னை வந்தார். பின்னர் பெரியகுளம் சென்ற போது தேனியில் பாஜகவினர் அவருக்கு காவித் துண்டு அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி
இதையடுத்து அடுத்த நாளே தலைமை கழக நிர்வாகிகள் குழு கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூட்டியது. இந்த கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ்ஸை துரோகி என காட்டமாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு ஜூலை 11 ஆம்தேதி கூடும் என எடப்பாடி தரப்பினர் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

பொதுச் செயலாளர் எடப்பாடி?
இந்த பொதுக் குழுவில் வைத்து எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இந்த பொதுக் குழுவை தடுக்க ஓபிஎஸ் தரப்பு ஆர்வம் காட்டினர். அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை அவசரமாக விசாரிக்க முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் ஜூலை 4-ல் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

பரபரப்பு ஆலோசனை
இது ஓபிஎஸ் தரப்புக்கு லேசான பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதனால் கலக்கமடைந்த ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமசந்திரன் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்து வருகிறார். வைத்திலிங்கத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
-
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்? -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள்












Click it and Unblock the Notifications