நம்பர் 2வா.. செய்து பாருங்கள்.. என் வண்டி எங்க போகும் தெரியும்ல?.. ஓபிஎஸ் சொன்ன அந்த ஒரு வார்த்தை?
சென்னை: ஒற்றைத் தலைமை என்ற பேச்சை எடுத்தால் அடுத்த நாளே நான் என்ன செய்வேன் என்பதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியதை அடுத்து எடப்பாடி தரப்பு சற்று அதிர்ச்சி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற கோஷம் நாளுக்கு நாள் டிரென்டாகி வருகிறது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஒற்றைத் தலைமை இருவரும் விட்டுக் கொடுக்கக் கூடாது என பரஸ்பர ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இதனால் அதிமுக யாருக்கு போய் சேரும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ், ஜெயலலிதாவின் குட் வில் புக்கில் இடம்பிடித்தவர்.

அதிமுக ஆட்சி
அதிமுக ஆட்சிக்கு எந்த பிரச்சினை என்றாலும் கட்சியையும் ஆட்சியையும் ஓபிஎஸ்ஸிடம்தான் ஜெயலலிதா ஒப்படைப்பார். ஆரம்பத்தில் நகர்மன்ற சேர்மேனாக இருந்து தனது விசுவாசத்தால் முதல்வர் பதவி வரை வந்தவர் ஓபிஎஸ்.. அவரை அதிமுகவிலிருந்து ஓரங்கட்டி, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கட்சியை கைப்பற்ற நினைப்பதாக தகவல்கள் வருகின்றன.

ஒற்றைத் தலைமை
ஆனால் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு இப்போதைக்கு வேண்டாம் என்ற முடிவில் ஓபிஎஸ் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து நடுநிலை வகிக்கும் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் ஒன் இந்தியா சார்பில் அணுகினோம். அவர்கள் கூறுகையில் "எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது எடுபடாது என ஓபிஎஸ் கருதுகிறார்.

இரட்டை தலைமை
தற்போதுள்ளது போல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனும் இரட்டை தலைமையே போதும். கட்சியை பலப்படுத்த ஒற்றுமையாக இருக்கலாம் என்கிறார். ஒரு வேளை தனக்கு அவைத் தலைவர் பதவி, தலைமைக் கழக தலைவர் பதவி உள்ளிட்டவற்றை கொடுத்து 2ஆம் கட்ட தலைவராக்க நினைத்தால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என ஓபிஎஸ் , எதிர்தரப்பை எச்சரித்தார்.

இரண்டாம் கட்ட தலைவர்
தனக்கு கட்சிதான் முக்கியம் என்பதால் இரண்டாம் கட்ட தலைவராக இருப்பதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் என்னை சீண்டி பார்க்க நினைத்தால் நான் சசிகலாவை அடுத்த நிமிடமே சந்திப்பேன். அவரிடம் ஒப்படைக்க வேண்டியதை ஒப்படைத்துவிடுவேன், பார்த்துக்கோங்க என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சசிகலாவுக்கு ஆதரவு
மேலும் தான் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தால் அதிமுகவில் தற்போது அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்கள் எல்லாம் தன் பின்னால் வந்துவிடுவார்கள், ஏற்கெனவே சசிகலா தலைமையை விரும்பும் தொண்டர்களும் வருவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் எடப்பாடி தரப்பு அதிரடியாக இறங்காமல் சற்று நிதானமாகவே அடியெடுத்து வைக்க வாய்ப்பிருக்கிறது" என நடுநிலைவாதிகள் தெரிவித்தனர்.

ஆறுமுகசாமி ஆணையம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓபிஎஸ் ஆஜரானார். அப்போது அவரிடம் சசிகலா குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவரை சின்னம்மா என்று குறிப்பிட்டே பதில் அளித்தார். மேலும் சசிகலா மீது தனக்கு தனிப்பட்ட முறையில் அபிமானமும் மரியாதையும் இருக்கிறது என்று ஓபிஎஸ் கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications