Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது என்ன எடப்பாடி வீட்டுச் சொத்தா? யார் இவருக்கு அதிகாரம் கொடுத்தது?.. கொந்தளித்த ஓபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கு சொந்தம்? என் வீட்டில் நானே திருடுவேனா என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு எதிராக ஓபிஎஸ் போட்ட வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பக்கம் தாவி வருகிறார்கள். இதனால் அவருக்கான ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் கோபால கிருஷ்ணன், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட இணைச் செயலாளர் ரங்கராஜ் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் தேனி பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

 ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்

இதையடுத்து ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஓபிஎஸ், தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் ஆட்சி அமைத்த ஒரே கட்சி அதிமுக. முன்னாள் முசல்வர் எம்ஜிஆர் உருவாக்கி தொண்டர்கள் இயக்கமாக மாற்றினார். கடந்த ஜூன் 23 இல் நடந்த கவுரமான பொதுக் குழுவில் சிவி சண்முகம் செய்தது கேலி கூத்தான செயல் ஆகும்.

பொதுக் குழு கூட்டம்

பொதுக் குழு கூட்டம்

ஜூன் 23 ம் தேதி 10 மணிக்கு பொதுக் குழு கூட்டத்தை வைத்துக் கொண்டு என் வீட்டை காலை 8 மணிக்கு எடப்பாடி பழனிசாமி கடந்து சென்றார். என்னை பொதுக் குழுவிற்கு வராமல் தடுக்கும் நோக்கத்தில் அவரது ஆதரவாளர்கள் வேண்டுமென்றே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர்.

200 இருக்கைகள்

200 இருக்கைகள்

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கடந்த ஜூலை 11 ஆம் தேதி நான் சென்ற போது 200 இருக்கைகளை போட்டு அமர்ந்து தலைமை கழகத்தை பூட்டி வைத்திருக்கிறார்கள். தலைமை கழகத்தை பூட்டுவதற்கு யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது? இது யார் வீட்டு சொத்து, எடப்பாடி பழனிசாமியின் அப்பா வீட்டு சொத்தா, ஜானகி அம்மாள் தன்னுடைய சொத்தை கழகத்திற்காக எழுதி கொடுத்தார்.

பொதுக் குழு கூட்டம்

பொதுக் குழு கூட்டம்

பொதுக் குழு அங்கு நடக்கும் போது அங்கு போகாமல் இவர்களுக்கு இங்கு என்ன வேலை, நான் திருடிச் சென்றுவிட்டேன் என சொல்கிறார்கள். எதற்கு நான் திருட போகிறேன், என் வீட்டில் நான் திருடுவேனா? நான் பேச ஆரம்பித்தால் யாரும் தாங்க மாட்டார்கள். அவ்வளவு சரக்கு இருக்கு. இதில் என்னை பதவி ஆசை பிடித்தவன் என்கிறார்கள் என ஓபிஎஸ் பொரிந்து தள்ளிவிட்டார்.

கடுமையாக விமர்சித்த ஓபிஎஸ்

கடுமையாக விமர்சித்த ஓபிஎஸ்

இத்தனை நாட்களாக எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்த போதிலும் ஓபிஎஸ் அமைதி காத்து கண்ணியத்துடன் பேசி வந்தார். ஆனால் நேற்று மதுரையில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி தரப்பினரை கோபத்துடன் பேசினார். அவர் பேசிய ஒவ்வொரு பேச்சுக்கும் சுற்றியிருந்த ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+