பாஜகவை நம்பி இருந்தாரே.. அவமானப்படுத்திய மோடி.. கூட்டணியை முறித்த ஓபிஎஸ்.. அடுத்து விஜய்? ஸ்டாலின்?
சென்னை: பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம் நிலைப்பாடு: எதிர்பார்ப்புகள்
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பிரதமரைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பல வகையான யூகங்கள் கிளம்பின. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
1. ஒரு காலத்தில் அதிமுகவில் சசிகலா ஆட்சிக்கு வருவதற்கு எதிராக தர்மயுத்தம் செய்தவர் ஓ பன்னீர்செல்வம். அப்போதில் இருந்தே ஓ பன்னீர்செல்வம் பாஜக உடன் நெருக்கமாக இருந்ததாக செய்திகள் வந்தன. பாஜக தலைவர்களையும் அவ்வப்போது ஓ பன்னீர்செல்வம் சந்தித்து வந்தார்.
2. அதன்பின் அதிமுக உடைந்து மீண்டும் ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி கரம் கோர்க்க பாஜக முக்கியமான காரணமாக இருந்தது. ஓ பன்னீர்செல்வம் அப்போது பாஜக உடன் மேலும் நெருக்கம் ஆனார்.
3. ஓ பன்னீர்செல்வம் மகன் ஓ பி ரவீந்திரநாத் நாடாளுமன்றத்திலேயே பாஜகவை, மோடியை அவ்வப்போது பெரிய அளவில் புகழ்ந்தும் பேசி வந்தார். நாடாளுமன்றத்தின் பாஜகவின் மசோதாக்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்தார்.
4. அதோடு நிற்காமல் மோடி தமிழ்நாடு வரும்போதெல்லாம் ஓ பன்னீர்செல்வம் காத்திருந்து வரவேற்றார்.
5. அதன்பின் அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்ட பின் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையே நீண்ட சட்டச போராட்டம் நடந்தது. இருவருக்கும் இடையே மிக நீண்ட சட்ட போராட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து டெல்லி ஆதரவு தனக்கு கிடைக்கும் என்று நம்பினார்.
6. டெல்லி பாஜக ஆதரவு கிடைத்தால் .. வழக்கில் வெல்ல முடியும் என்றும் ஓ பன்னீர்செல்வம் நம்பினார். ஆனால் அதிமுக தொடர்பான அனைத்து வழக்கிலும் ஓ பன்னீர்செல்வம் தோல்வியையே தழுவினார். இப்படி ஓ பன்னீர்செல்வம் தொடர்ச்சியாக பாஜகவையும், மோடியையும் நம்பியே இருந்தார்.
கூட்டணி முறிவு
இப்படிப்பட்ட நிலையில்தான் அதே பாஜகவுடன் ஓ பன்னீர்செல்வம் கூட்டணியை முறித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பிரதமரைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
எடப்பாடியை சந்தித்த மோடி.. எடப்பாடிக்கு முக்கியத்துவம் கொடுத்த மோடி ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை. அதோடு எடப்பாடிதான் கூட்டணியின் தலைவர், முதல்வர் வேட்பாளர் என்று அமித் ஷா அறிவித்ததையும் ஓ பன்னீர்செல்வம் விரும்பவில்லை. இப்படி நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் கூட்டணியை குறித்துள்ளார்.
விஜய் உடன் செல்லும் ஓபிஎஸ்?
இப்படிப்பட்ட நிலையில் விஜய் உடன் ஓ பன்னீர்செல்வம் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இந்த கூட்டணி உருவானால் தென் தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.
கடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 18% வாக்குகள் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் பங்களிப்பால் கிடைத்தது. இந்த இரு தலைவர்களும் அதிமுகவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் உடன் இணைந்தால் முக்குலத்தோர் வாக்குகளை தமிழக வெற்றி கழகத்திற்கு மாற்ற முடியும். நடிகர் விஜய் சரியான தொகுதியை தேர்ந்தெடுத்தால் தென் தமிழகத்தில் வெற்றி கூட பெற முடியும்.
இது போக உடலநலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின், தற்போது உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து இன்று முதல்முறையாக மீண்டும் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அதே சமயம், ஓ. பன்னீர்செல்வமும் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். இருவரும் ஒரே நேரத்தில் பூங்காவில் இருந்தபோது சந்தித்துக்கொண்டனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கமாக உடற்பயிற்சிக்காக இன்று காலை அடையார் பூங்காவுக்குச் சென்றார். அப்போது, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் அங்கு நடைப்பயிற்சிக்காக வந்துள்ளார். இருவரும் சந்தித்துக்கொண்டது குறித்து பல யூகங்கள் எழுந்துள்ளன. இந்தச் சந்திப்பின்போது இரு தலைவர்களும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விதமான கருத்துகளை உருவாக்கியுள்ளது. திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ் செல்கிறாரோ என்ற கேள்வியும் இதன் மூலம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications