சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓபிஎஸ் பயன்படுத்திய "மெகா" அஸ்திரம்.. அனல் பறந்த வாதம்! பொதுக்குழு வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பான உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி முன்பாக ஓ பன்னீர்செல்வம் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த மனுவில் பொதுக்குழு காரணமாக மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும், ஆனால் மிகவும் தாமதமாக அழைப்பு விடுத்துள்ளனர். இது விதிப்படி தவறு. அதனால் பொதுக்குழுவை நடத்த அனுமதி அளிக்க கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் மனுவில் கூறியது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

பொதுக்குழு கூட்டியதே செல்லாது.. ஓபிஎஸ் பரபர வாதம்.. நான் என்ன செய்வது? உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி பொதுக்குழு கூட்டியதே செல்லாது.. ஓபிஎஸ் பரபர வாதம்.. நான் என்ன செய்வது? உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி

ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதம்

ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதம்

இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதத்தில், கூட்டத்திற்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்தாலும் மற்ற விவகாரங்கள் பற்றி விசாரிக்க வேண்டும். மற்ற விவகாரங்கள் பற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தற்போது பொதுக்குழு கூட்டியதே செல்லாது என்பதே எங்கள் வழக்கு. பொதுக்குழு சட்டத்திற்கு புறம்பாக கூடுவதால் விதிகள் மீறப்பட்ட வாய்ப்பு.விதிகளுக்கு புறம்பாக, ஒற்றைத் தலைமையைக் கொண்டு வரும் வகையில் பொதுக்குழுவை கூட்ட முயற்சிக்கின்றனர்..

எடப்பாடி தரப்பு வாதம்

எடப்பாடி தரப்பு வாதம்

ஜூலை 11 ஆம் தேதி நடக்கவுள்ள பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர முயற்சி நடக்கிறது. பொதுக்குழு அழைப்பு யார் பெயரில் இருக்கிறது என்பதே பிரச்சனை, என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதம்வைத்தது. இதையடுத்து வாதம் வைத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஜூன் 23ம் தேதியே பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடும் என்று அறிவித்துவிட்டோம். முன்பே நாங்கள் அறிவித்துவிட்டோம். இது செய்திகளில் வந்துவிட்டது. இதனால் கூட்டம் நடத்தும் உரிமையை பறிக்க கூடாது.

 ஓபிஎஸ் பதில் வாதம்

ஓபிஎஸ் பதில் வாதம்

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. அதனால் இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் விதமாக பொதுக்குழு கூடுகிறது. இந்த பொதுக்குழுவில் யார் வேண்டுமானாலும் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்தது. இதற்கு ஓ பன்னீர்செல்வம் தரப்பு முக்கியமான அஸ்திரத்தை வாதமாக வைத்து. ஓபிஎஸ் தரப்பு வைத்த பதில் வாதத்தில், சட்டப்படி பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இந்த பொதுக்குழு சட்டப்படி கூட்டப்படவில்லை.

ஒத்திவைப்பு

ஒத்திவைப்பு

பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்தான் கூட்ட வேண்டும். ஆனால் தலைமைக்கழகம் எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் 5 வருடம் இருக்கிறது. அதனால் சட்டப்படி இவர்கள்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு கூறியது. இரண்டு தரப்பின் வாதங்களையும் நீதிபதி குறிப்பெடுத்துக்கொண்டார்.

Recommended Video

    தனிப்பட்ட விருப்பத்திற்காக கட்சியை கூறு போடுபவர்களை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் - சசிகலா
    கேள்வி

    கேள்வி

    இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதி, ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுவின் போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. அந்த பதவிகள் அப்போது இருந்ததே. அப்படி இருக்கும் போது ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடக்கும் என்ற அறிவிப்பை தமிழ்மகன் உசேன் எப்படி அறிவிக்க முடியும்? அவைத்தலைவர் எப்படி இந்த அறிவிப்பை வெளியிட முடியும் என்று கேள்வி எழுப்பினார். 2 மணி நேரங்களுக்கு மேலாக விசாரணை நடத்த நிலையில் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.

    English summary
    O Panneerselvam case against AIADMK general council meeting adjourned for tomorrow. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பான உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X