பாத்தீங்களா..பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! கலங்க வைத்த ரெய்டு! சப்போர்ட்டாய் வந்த ஓபிஎஸ்ஸால் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நிர்வாகிகளை மட்டுமல்லாது ஓபிஎஸ் தரப்பில் உள்ள நிர்வாகிகளையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் முகாம் மாற தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மரணம் அடைந்ததிலிருந்து அதிமுகவில் யார் பெரியவர் என்று அதிகாரம் முதல் நடந்து வருகிறது. அவர் மரணத்தின் போது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவின் தலையிட்டால் பதவி இழந்த நிலையில் அப்போது தர்ம யுத்தத்தை தொடங்கினார்.

தற்போது சசிகலாவால் முதல்வராகப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பதால் அவருக்கு எதிராக இரண்டாவது தர்ம யுத்தத்தை நடத்தி வருகிறார். இப்படி கடந்த 7 ஆண்டுகளாக ஓபிஎஸ்ஸின் நிலையில் இப்படித்தான் உள்ளது.

அதிமுக விவகாரம்

அதிமுக விவகாரம்

கடந்த நான்கு ஆண்டுகளில் ஆட்சியை நடத்த ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவு தேவை என்ற நிலையில் அவருக்கு துணை முதலமைச்சர் கட்சியின் தலைமை பதவியான ஒருங்கிணைப்பாளர் பதவி எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த நிலையில் தற்போது எதிர்க்கட்சியாகிவிட்ட நிலையில் தற்போது அதிமுகவை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைப்பதாகவும் இது நம்பிக்கை துரோகம் என ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

திமுக எதிர்ப்பு

திமுக எதிர்ப்பு

அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் பிரதான கொள்கைகளில் ஒன்றான திமுக எதிர்ப்பு என்ற கொள்கையிலிருந்து விலகி விட்டதாகவும் வெளிப்படையாகவே முதல்வரை பாராட்டுவது மகனை விட்டு முதலமைச்சர் சந்திப்பது என அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் இரட்டை தலைமையால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் அதிமுக உறக்க நிலையில் இருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில் தான் ஓபிஎஸ்ஸின் கருத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நிர்வாகிகளை மட்டுமல்லாது ஓபிஎஸ் தரப்பில் உள்ள நிர்வாகிகளையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

கடந்த அதிமுக ஆட்சியின் போது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில் ஏற்கனவே இரு முறை முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இல்லம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர், எல்இடி விளக்கு மாற்றுவதில் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கரின் இல்லம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் என தமிழகத்தில் சுமார் 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

ஒ.பன்னீர்செல்வம்

ஒ.பன்னீர்செல்வம்

இது தொடர்பாக பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது,' தமிழக அரசு தனது கடமையை செய்கிறது. எந்த குற்றமும் செய்யவில்லை என்பதை சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் தான் நிரூபிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

 எடப்பாடி தீவிரம்

எடப்பாடி தீவிரம்

இந்த கருத்துதான் தற்போது அவர் தரப்பிலேயே கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி உடனான விவகாரம் உட்கட்சி பிரச்சனை என்ற நிலையில் அதிமுகவின் எதிரியான திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஓபிஎஸ் துணை போவது போல பேசுகிறார் எனவும் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் பலரும் ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்தால் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு சென்று நிலையில்," பார்த்தீர்கள? இதே நிலைதான் நாளை உங்களுக்கும்!" என அவர்களை தங்கள் பக்கம் வளைக்கும் முயற்சியும் படு ஜோராக நடைபெற்று வருகிறது என்கின்றனர் விவரம் அறிந்த மூத்த ரத்தத்தின் ரத்தங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+