ஆம்ஸ்ட்ராங் கொலை.. தலைநகரை கொலை நகராக மாற்றிய திமுக! கொடநாடு மேட்டரையும் இழுத்த ஓ.பன்னீர்செல்வம்..!
சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சி என்பது தீமைகள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது.

நேற்று வீட்டு அருகே ஆம்ஸ்ட்ராங் நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வழக்கறிஞர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கூடி வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை கண்டித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சி என்பது தீமைகள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"காவல் துறையினரைக் கண்டு ரவுடிகள் அஞ்சி ஓடிய காலம் மாறி, ரவுடிகள் ராஜ்யமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் சட்ட விரோத, சமூக விரோதச் செயல்களுக்கு தி.மு.க. துணைபோய்க் கொண்டிருக்கிறது. கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சி என்பது சமூகவிரோதிகளின் ஆட்சி என்று சொன்னால் அது மிகையாகாது.
அந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை, பெரம்பூர், வேணுகோபால சுவாமி தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு இரவு சுமார் 7.00 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகொலை செய்யப்பட்ட திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கொலைவெறித் தாக்குதலின்போது படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் நண்பர்கள் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசினைக் கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதியை, ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவரை மக்கள் நடமாட்டம் மிகுந்த சென்னையின் பிரதான இடத்தில் வெட்டி சாய்க்கும் துணிச்சல் ரவுடிகளுக்கு வந்துவிட்டது என்றால், ன்றால், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்பது துளிகூட இல்லை என்பதுதான் அர்த்தம்.
ஒவ்வொரு முறையும் கொலைகள் நடைபெறும்போது, தனிப்படை அமைப்பதும், ஒரு சிலரை பிடித்து கைது செய்வதும், வாடிக்கையாக இருக்கிறதே தவிர, சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுத்ததாகத் தெரியவில்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு போல பல வழக்குகள் பல ஆண்டுகளாக சீரியல் போல ஒடிக் கொண்டிருக்கின்றனவே தவிர, கொலை செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்ததாகத் தெரியவில்லை.
திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கொலைக்கு காரணமானவர்கள் அனைவரையும் கைது செய்து, அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆட்சியினால் ஏற்படும் நன்மை, தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படுபவர்தான் அரசர் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். ஆனால், கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி என்பது தீமைகள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. எதையும் ஆராயவில்லை என்பது தெளிவாகிறது." என கூறியுள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications