ட்விஸ்ட் தரும் ஓபிஎஸ்! நெருங்கும் பொதுக்குழு.. தேர்தல் ஆணையத்தில் முறையீடா? வைத்தியலிங்கம் மறுப்பு
சென்னை: ஓபிஎஸ் சார்பாக அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் அதை மறுத்துள்ளார்..
Recommended Video
அதிமுக பொதுக்குழு நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. பெரும் பரபரப்பிற்கு இடையில் நடைபெற்ற பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது.
பொதுக்குழுவின் 23 தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம். அடுத்த பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடும் என்று அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்தார்.

பொதுக்குழு
இந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று அவை தலைவர் தமிழ் மகன் உசேன் வெளிப்படையாக அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு மேடையிலேயே ஓ பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் வெளிநடப்பு செய்தார். வெளியே சென்ற ஓபிஎஸ் மீது அதிமுக எடப்பாடி ஆதரவாளர்கள் சிலர் பாட்டில் தூக்கி வீசிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவைத்தலைவர்
இந்த நிலையில் நேற்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடும் என்று அறிவித்தது தவறு என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். அதிமுக விதிப்படி அதிமுக பொதுக்குழு கூடுவதை ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்தான் அறிவிக்க வேண்டும். அதாவது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்தான் அழைக்க வேண்டும். இவர்கள் கையெழுத்து இருந்தால் பொதுக்குழு அறிவிப்பு செல்லும்.

வழக்கு
ஆனால் நேற்று மேடையில் ஓ பன்னீர்செல்வத்தை வைத்துக்கொண்டே தமிழ் மகன் உசேன் பொதுக்குழு கூடும் என்று அறிவித்தார். அதாவது ஓ பன்னீர்செல்வம் கையெழுத்து இல்லாமலே பொதுக்குழு கூடுவதாக தமிழ் மகன் உசேன் அறிவித்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் சார்பாக அதிமுக பொதுக்குழு கூட்ட அறிவிப்பிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு
ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இன்றி பொதுக்குழு கூட்டம் கூட்ட முடியாது. இது அதிமுக கட்சி விதிகளுக்கு எதிரானது. அதிமுக பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று ஓ பன்னீர்செல்வம் மனு அளித்ததாக கூறப்பட்டது. ஆனால் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் அதை மறுத்துள்ளார். ஓபிஎஸ் இப்படி மனு எதையும் கொடுக்கவில்லை என்று அவரின் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications