டெல்லி பறந்த "ஆடிட்டர்".. ஆரம்பித்த சாணக்கிய வேலை.. ஓபிஎஸ் தனிக்கட்சி? அதிமுகவில் ஐக்கியம்? திக்திக்
சென்னை: ஓ பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், தமிழக அரசியல் முக்கிய அங்கமாக இருக்கும் பிரபல ஆடிட்டர் ஒருவரும் டெல்லிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறுவதாக அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது, அவரை சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பிரதமரை சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பல வகையான யூகங்கள் கிளம்பின. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்

பாஜக ஓ.பன்னீர்செல்வம் மோதல்
ஒரு காலத்தில் அதிமுகவில் சசிகலா ஆட்சிக்கு வருவதற்கு எதிராக தர்மயுத்தம் செய்தவர் ஓ பன்னீர்செல்வம். அப்போதில் இருந்தே ஓ பன்னீர்செல்வம் பாஜக உடன் நெருக்கமாக இருந்ததாக செய்திகள் வந்தன. பாஜக தலைவர்களையும் அவ்வப்போது ஓ பன்னீர்செல்வம் சந்தித்து வந்தார். அதன்பின் அதிமுக உடைந்து மீண்டும் ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி கரம் கோர்க்க பாஜக முக்கியமான காரணமாக இருந்தது. ஓ பன்னீர்செல்வம் அப்போது பாஜக உடன் மேலும் நெருக்கம் ஆனார்.
ஓ பன்னீர்செல்வம் மகன் ஓ பி ரவீந்திரநாத் நாடாளுமன்றத்திலேயே பாஜகவை, மோடியை அவ்வப்போது பெரிய அளவில் புகழ்ந்தும் பேசி வந்தார். நாடாளுமன்றத்தின் பாஜகவின் மசோதாக்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்தார். அதோடு நிற்காமல் மோடி தமிழ்நாடு வரும்போதெல்லாம் ஓ பன்னீர்செல்வம் காத்திருந்து வரவேற்றார்.
அதன்பின் அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்ட பின் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையே நீண்ட சட்ட போராட்டம் நடந்தது. இருவருக்கும் இடையே மிக நீண்ட சட்ட போராட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து டெல்லி ஆதரவு தனக்கு கிடைக்கும் என்று நம்பினார். டெல்லி பாஜக ஆதரவு கிடைத்தால் .. வழக்கில் வெல்ல முடியும் என்றும் ஓ பன்னீர்செல்வம் நம்பினார். ஆனால் அதிமுக தொடர்பான அனைத்து வழக்கிலும் ஓ பன்னீர்செல்வம் தோல்வியையே தழுவினார். இப்படி ஓ பன்னீர்செல்வம் தொடர்ச்சியாக பாஜகவையும், மோடியையும் நம்பியே இருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் அதே பாஜகவுடன் ஓ பன்னீர்செல்வம் கூட்டணியை முறித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பிரதமரைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. எடப்பாடியை சந்தித்த மோடி.. எடப்பாடிக்கு முக்கியத்துவம் கொடுத்த மோடி ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை. அதோடு எடப்பாடிதான் கூட்டணியின் தலைவர், முதல்வர் வேட்பாளர் என்று அமித் ஷா அறிவித்ததையும் ஓ பன்னீர்செல்வம் விரும்பவில்லை. இப்படி நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் கூட்டணியை முறித்துள்ளார்.
திடீர் டெல்லி பயணம்
இதையடுத்தே ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். ஓ பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், தமிழக அரசியல் முக்கிய அங்கமாக இருக்கும் பிரபல ஆடிட்டர் ஒருவரும் டெல்லிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் எதிரி என்று டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து பேட்டி கொடுத்தனர்.
இதையடுத்து பல யுகங்கள் கிளம்பின. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ பன்னீர் செல்வம், அடுத்த கட்டமாக தனிக்கட்சி தொடங்க உள்ளாரா? அல்லது விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க உள்ளாரா? அல்லது திமுக கூட்டணியில் இணைய உள்ளாரா என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் அவ்வப்போது எழுந்தது.
இப்படிப்பட்ட நிலையில்தான் அவர் டெல்லி சென்றுள்ளார். அவர் டிசம்பர் 10 அல்லது 15ம் தேதி புதிய கட்சியை தொடங்குவார் என்று ஒரு பக்கம் யுகங்கள் வைக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம் அதிமுகவில் மீண்டும் இணைக்கப்படுவார், இதற்கு அழுத்தம் தரவே ஆடிட்டர் டெல்லி சென்றுள்ளார் என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது.
சென்னையில் இன்று புயல் கரையை கடந்தாலும் அடுத்த 10 நாட்கள்.. அதிமுகவிற்குள் பெரிய புயல் அடிக்கும் என்கிறார்கள்.. அரசியல் வானிலை வல்லுனர்கள்!












Click it and Unblock the Notifications