தீர்ப்பை அடுத்து வீட்டில் தனியாக அமர்ந்திருந்த ஓபிஎஸ்.. இன்றே சென்னை பறக்கிறாராம்! அடுத்த மூவ் என்ன?
கடந்த சில நாட்களாக பெரியகுளத்தில் இருந்துவந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை செல்கிறார்.
சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து இன்று தேனியில் இருந்து சென்னை செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம். நாளை ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்கும் ஓபிஎஸ், தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை செல்லும் ஓபிஎஸ், அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளோடு, இன்றைய தீர்ப்பு குறித்து தீவிர ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு, சீராய்வு மனு தாக்கல் செய்வதா இல்லையா என்ற தனது நிலைப்பாட்டை ஓபிஎஸ் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்ப்பு
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்த நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லும் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்தாண்டு செப்டம்பரில் தீர்ப்பளித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உற்சாகம் இழந்த ஓபிஎஸ் டீம்
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வெளியானது. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று உறுதிசெய்தது. இதன் மூலம், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் நீக்கப்பட்டதும் செல்லும் என்றாகியுள்ளது. இன்றைய தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, ஓபிஎஸ் தரப்பினர் உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர்.

வெளியே செல்லவில்லை
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் நேரத்தில் தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் இருந்த ஓபிஎஸ், தேனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரைச் சென்று பார்த்து நலம் விசாரித்தார். பின்னர் அமைதியாக வீடு திரும்பினார். தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு எதிராக வந்துள்ளதால், அவரது ஆதரவாளர்களும் உற்சாகமிழந்து காணப்படுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பதாக இருந்த திருமண நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் பயணத்தையும் இன்று ரத்து செய்துவிட்டு தனியாகவே வீட்டில் அமர்ந்திருந்தாராம்.

சென்னை செல்லும் ஓபிஎஸ்
இதனைத்தொடர்ந்து தேனியில் இருந்து மதுரை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் இன்று ஓபிஎஸ் சென்னை செல்லப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நாளை நடைபெறவுள்ள ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்வதாக கூறப்படுகிறது. சென்னை செல்லும் ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடனும், சட்ட வல்லுநர்களுடனும் ஆலோசனை நடத்தி, தனது அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அறிவிப்பார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முழு வெற்றி இல்லை
இன்று தீர்ப்பு வந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன், இந்த வழக்கில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சிவில் கோர்ட்டில் விசாரணை நடத்திக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும், சிவில் நீதிமன்றத்தில் மூன்று வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்பதால் இதனை எடப்பாடி பழனிசாமி தரப்பின் முழு வெற்றி எனக் கருத முடியாது, மீண்டும் சட்டப்போராட்டம் தொடர உச்ச நீதிமன்றம் வழிவகை செய்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

சிவில் வழக்கு
மேலும், அந்த வழக்கு முடியும் வரை பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இயலாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்ந்து நீடிப்பதாகவும், தேர்தல் நடத்தினால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும், உரிமையியல் நீதிமன்ற வழக்கை குறிப்பிட்ட கால அவகாசத்தில் முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்தார்.

சட்ட நடவடிக்கை
அந்தவகையில், ஓ.பன்னீர்செல்வம், இந்த பிரதான வழக்கில் தான் ஒருங்கிணைப்பாளர் என்பதை நிறுவும் வகையில் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தார் என்று கூறப்படுகிறது. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வது, அல்லது தேர்தல் ஆணையத்தை அணுகுவது பற்றியும் ஓ.பன்னீர்செல்வம், சட்ட வல்லுநர்கள், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பார் எனக் கூறப்படுகிறது.
-
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்!












Click it and Unblock the Notifications