தனியார் ஆம்புலன்ஸ்களில் பணம் பறிக்கிறார்கள்.. முக ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் விடுத்த கோரிக்கை..!
சென்னை: கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் ஆம்புலன்ஸ்களில் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதனை விசாரித்து முறைப்படுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார.
தமிழக சுகாதாரத்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில், "கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களில் முதல் 10 கி.மீ.,க்கு ரூ.1,500 ஆகவும், பிறகு கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா ரூ.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஆக்சிஜன் உள்ளிட்ட அடிப்படை உயிர்காக்கும் கருவிகள் கொண்ட ஆ்மபுலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ.,க்கு 2 ஆயிரம் ரூபாய் ஆகவும், பிறகு ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா ரூ.50 ஆகவும், வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆமபுலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ.,க்கு ரூ.4 ஆயிரம் ஆகவும், பிறகு ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.100 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் ஆம்புலன்சுகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. சென்னையில் 15 கி.மீ-க்கு சாதாரண ஆம்புலன்சுகளுக்கு ரூ.6 ஆயிரத்து 500-ம், ஆக்சிஜன் வசதி இருந்தால் ரூ.9 ஆயிரமும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிகிறது.
நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிப்பதை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications