“ஜெயிலுக்கு போக இருந்த எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றிய 2 பேர்”.. ஓபிஎஸ் பேச்சு!
தேனி: "யாரால் எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு வந்தார்? யாரால் பதவி பெற்றார்? சிறை செல்ல இருந்த அவரை, செல்வகணபதி, முத்துச்சாமி ஆகியோர்தான் காப்பாற்றினர் என நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்." என முன்னாள் முதல்வரும் போடி தொகுதி திமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
தேனி மாவட்டம் போடியில் போடி சட்டமன்ற தொகுதிக்கான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் திமுக எம்எல்ஏ லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய போடி தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "இன்றைய அரசியல் சூழலில் திமுகவில் நான் இணைந்ததை அனைவரும் வரவேற்கின்றனர். அதற்கு காரணம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய முப்பெரும் தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல் ஆகிய குணங்களை பெற்று அனைவரையும் அரவணைக்கும் பக்குவமிக்க ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டுமே என்பதால் தான்.
அவரது தலைமையில் செயல்படும் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளில் இதுவரை யாரும் வெளியேறினார்கள் என்ற நிலை இல்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, தனக்குத் தானே கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் கூட்டணியின் தலைவர் என்று உருவாக்கிக் கொண்டு கூறி வருகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமிஅரசியல் நாகரீகம் இல்லாத தலைவராக உள்ளார். அவருக்கு படுதோல்வி உறுதி. ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாத சூழ்நிலை உருவாக்கியுள்ளது. அதனால் ஈபிஎஸ் மூளை அவுட் ஆகிவிட்டது. கலைஞரை பற்றி பேச ஈபிஎஸ்க்கு தகுதியில்லை. அண்ணாவின் தம்பியாக, பெரியாரின் சிஷ்யனாக எவ்வளவோ சோதனைகளை தாண்டி தமிழக மக்களுக்கு சமூக நீதியை பெற்றுக் கொடு்த்தவர் கலைஞர். அத்தகைய தலைவர் குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது?
யாரால் எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு வந்தார், யாரால் பதவி பெற்றார்? சிறை செல்லவிருந்த எடப்பாடி பழனிசாமியை செல்வகணபதி, முத்துச்சாமி ஆகியோர்தான் காப்பாற்றினர். உலகில் நன்றி கெட்ட நம்பிக்கை துரோகி அரசியல்வாதி எடப்பாடி பழனிசாமி மட்டுமே. எந்த நேரத்தில் அவர் கட்சியின் பொதுச்செயலாளராக வந்தாரோ, அப்போது முதல் அதிமுக தொடர் தோல்விகளைத்தான் சந்தித்து வருகிறது." என்றார்.
-
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications