பன்னீருக்கு கட்டம் கட்டிய பொதுக்குழு.. அதிமுக அலுவலகத்தைக் கைப்பற்றிய ஓபிஎஸ் அவசர ஆலோசனை!
சென்னை : ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
Recommended Video
வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி நடத்தி வரும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி ஆகிய அதிமுக நிர்வாகிகள் தலைமைக் கழகத்தில் ஓபிஎஸ் உடனான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு
பரபரப்பான சூழலில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பங்கேற்பில் கூடியுள்ளது. இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் வீட்டில் முக்கிய ஆலோசனை நடத்தினார். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். இதனையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொண்டர்கள் மோதல்
அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர் ஆதிராஜாராம் தலைமையில் தொண்டர்கள் குவிக்கப்பட்டனர். அவர்கள் அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். இதனையடுத்து கட்சி அலுவலகம் முன்பு இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர்.

பூட்டுகளை உடைத்து
இரு தரப்பினரும் கட்டைகள் மற்றும் கற்கள் கொண்டு மாற்றி மாற்றி தாக்கிக் கொண்டனர். இதனால் பெரும் பதட்டம் நிலவுகிறது. இந்த மோதலில் பலர் படுகாயமுற்றனர். அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், அதிமுக தலைமை அலுலகத்தின் கதவுகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடித்து உடைத்து உள்ளே சென்றனர்.

ஓ.பி.எஸ் கட்டுப்பாட்டில்
ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமைக் கழகத்தின் உள்ளே நுழைந்து, பேனர்களில் இடம்பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமியின் படங்களை கிழித்தெறிந்து அட்டகாசம் செய்தனர். அலுவலகத்திற்குள்ளும் புகுந்த ஓபிஎஸ் ஆதரவு அதிமுக தொண்டர்கள்அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினர். கட்சி அலுவலகம் தற்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் கையில் வந்துள்ளது.

ஓபிஎஸ் ஆலோசனை
அதிமுக அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் தரப்பு கைப்பற்றி உள்ளனர். மேலும், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக அலுவலகத்திற்குள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி ஆகிய அதிமுக நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

முக்கிய ஆலோசனை
வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், பொதுக்குழுவின் முடிவுகள் குறித்து ஓபிஎஸ் தனது தரப்பினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
-
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக்












Click it and Unblock the Notifications