இதெல்லாம் பூலோகத்தில் உண்டா? ரெடியாகாத வேட்பாளர்.. எடப்பாடி திணறுகிறாராமே? இவர் இப்படி சொல்றாரே?

ஓபிஎஸ் பயப்படாமல் இருக்கிறார். ஓபிஎஸ் சின்னத்தை பற்றி கவலைப்படவில்லை என்று அரசியல் விமர்சகர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியிட ரெடியாக இல்லை, அங்கே களமிறங்க யாரும் தயாராக இல்லை, வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் எடப்பாடி திணறுகிறார் என்று அரசியல் விமர்சகர் காந்தராஜ் ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தொடக்கத்தில் இருந்தே தீவிரம் காட்டி வருகிறது. ஓ பன்னீர்செல்வம், பாஜக எல்லோரும் என்ன செய்கிறார்களோ.. அதை பற்றி கவலையில்லை.. நாம் போட்டியிடுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

இதற்காக தேர்தல் கமிட்டி குழுவையும் அமைத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வேகம் காட்டி வருகிறது. ஆனால் எடப்பாடி தரப்பு இன்னும் வேட்பாளரை இறுதி செய்யவில்லை. எடப்பாடி தரப்பு வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறது.

இது தொடர்பாக அரசியல் விமர்சகர் காந்தராஜ் ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஓபிஎஸ் தரப்பு சுணக்கம்

ஓபிஎஸ் தரப்பு சுணக்கம்

அவர் அளித்த பேட்டியில், ஓபிஎஸ் தரப்பு சுணக்கமாக இல்லை. எடப்பாடி வேகமாக இருப்பது போல தெரிய காரணம் இருக்கிறது. அவர் பயந்துவிட்டார். அதனால் ஆட்களை அதிகம் களமிறக்கி உள்ளார். 118 பேரையா களமிறங்குவீர்கள். அவ்வளவு பயமா? ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ஆள் என்று இறக்கி இருக்கிறீர்களா? தேர்தல் குழுவில் இவ்வளவு பெரிய குழுவை இறக்கி இருக்கிறீர்களா ? அவ்வளவு பயமா? ஒருத்தரை மிஸ் செய்தால் கூட அவர் நம்மை கழற்றிவிட்டு விடுவார். நமக்குத்தான் சிக்கல் என்று அவர் நினைக்கிறார். அவர் பயத்தில் இருக்கிறார்.

வாய்ப்பு

வாய்ப்பு

அதனால்தான் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார். இதெல்லாம் பூலோகத்தில் உண்டா? அவர் இத்தனை பேரை இறக்கியும் வேட்பாளர் போட்டியிட ரெடியாக இல்லை. அங்கே களமிறங்க யாரும் தயாராக இல்லை. வேட்பாளரை சொல்ல முடியாமல் எடப்பாடி திணறுகிறார். யாரும் வரவில்லை.எடப்பாடியிடம்தான் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கட்சியே அவரிடம் தானே இருக்கிறது. அவர் ஜெயிக்க வேண்டியதுதானே? ஏன் சின்னத்தை பற்றி கவலைப்படுகிறார்கள்? அவர் ஜெயிக்க வேண்டியது தானே?

சின்னம்

சின்னம்

அவர் சின்னம் போய்விடும் என்ற பயத்தில் இருக்கிறார். பாருங்கள் ஓபிஎஸ் பயப்படாமல் இருக்கிறார். ஓபிஎஸ் அதை பற்றி கவலைப்படவில்லை. ஈரோடு வெள்ளாள கவுண்டர்கள் நிறைந்த பூமி. ஜாதி அடிப்படையில் கூட எடப்பாடிதான் பவர் புல் ஆள். ஆனாலும் அவர் பயப்படுகிறார். ஜாதி அடிப்படையில் அவர் நினைத்தால் வெல்ல முடியும். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அங்கே ஜாதி வாக்குகள் இருக்கின்றன. செங்கோட்டையன், முத்துசாமியை ஓரம்கட்டியது எடப்பாடிதான். இப்போது செங்கோட்டையன் காலில் போய் இப்படி எடப்பாடி விழுந்துவிட்டார்.

முத்துசாமி

முத்துசாமி

முத்துசாமி திமுகவிற்கு வந்துவிட்டார். அந்த அளவிற்கு எடப்பாடி சரிவை சந்தித்து இருக்கிறார். தேர்தல் நேர்மையாக நடந்தால் கண்டிப்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரச்சாரமே இல்லாமல் ஜெயித்து விடுவார். வெள்ளாள கவுண்டர்கள் இருக்கும் இடங்களில் மட்டுமே கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வென்றது. எப்படி வென்றது? இதை ஆராய வேண்டும்? பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுகவும் அஞ்சுகிறது. பாஜக கூட்டத்திற்கு ஆட்களே வருவதே இல்லை. காசு கொடுத்து கூப்பிட்டால் கூட பாஜக கூட்டத்திற்கு மக்கள் வர மாட்டார்கள். ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிதான் வெல்லும். பொறுத்திருந்து பார்க்கலாம், என்று அரசியல் விமர்சகர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+