அங்கே போனாலும் எடுபடாது.. சல்லி சல்லியாக உடையும் ஓபிஎஸ் பிளான்.. ஆஹா.. இவர் என்ன இப்படி சொல்லிட்டாரே

ஓபிஎஸ் கருத்தை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை, அவருக்கு சிக்கல் ஏற்படவே வாய்ப்பு உள்ளது என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்போது இரட்டை இலை சின்னம் பிரச்சசையில் இருக்கிறது, ஓபிஎஸ்ஸுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பு குறைவு, என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கில் கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது. இந்த பொதுக்குழு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் மேல்முறையீடு வழக்கு ஆகும். இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் கிடைக்காத பட்சத்தில், சின்னம் முடங்கினால் புல்லட் சின்னம் கேட்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம் ஆனால் தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் சிக்கலில் உள்ள நிலையில் இந்த மோதல் தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

கிரவுண்ட் ரிப்போர்ட்

கிரவுண்ட் ரிப்போர்ட்

அவர் அளித்த பேட்டியில், கவுண்டர்கள் கட்சியாக அதிமுக மாறினால் அது பெரிய சிக்கலாகும். எடப்பாடி அப்படித்தான் செய்து வருகிறார். கவுண்டர்கள் மீது மட்டும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி செய்தால் அதிமுக மங்கி போகும்.கொங்கிலேயே வெள்ளாள கவுண்டர்கள் இல்லாமல் மற்ற ஜாதியினர் எடப்பாடிக்கு எதிராக திரும்புவார்கள். கொங்கில் எல்லா ஜாதியின் வாக்குகளையும் பெற வேண்டும் என்றால் எடப்பாடிக்கு ஓபிஎஸ் ஆதரவும் தேவை. அதுதான் கிரவுண்ட் ரிப்போர்ட்.

மற்ற கட்சி

மற்ற கட்சி

மற்ற கட்சிகளும் வாக்களித்தால் மட்டுமே அதிமுக வெல்ல முடியும். வெள்ளாள கவுண்டர்களின் வாக்குகளை மட்டும் வைத்துக்கொண்டு எடப்பாடி ஜெயிக்க முடியாது. ஜெயலலிதாவிற்கு அடிமையாக இருந்தவர்கள் தானே எடப்பாடி அணியினர். இப்போது அவர்கள்தான் கட்சி என்றால் எப்படி? எடப்பாடி - ஓபிஎஸ் சேர்ந்து இருந்தால் அது சாதி சாராத அதிமுகவாக இருக்கும். எடப்பாடி மட்டும் இருந்தால் அது ஒற்றை ஜாதி கட்சியாக மாறும். எடப்பாடி மட்டும் இருந்தால் அதிமுகவால் 15 சதவிகித வாக்குகளை கூட பெற முடியாது.

அதிமுக வெல்ல முடியும்

அதிமுக வெல்ல முடியும்

எடப்பாடி மட்டும் இருந்தால் அடுத்த லோக்சபா தேர்தலில் 15 சதவிகிதம் உள்ள கட்சியாக அதிமுக சுருங்கி போகும். எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் சமயத்தில் மற்ற ஜாதியினரிடம் சரண்டர் ஆக வேண்டிய நிலை ஏற்படும். மோடியை கூட கழற்றிவிட கூடாது என்று எடப்பாடி திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார். ஓபிஎஸ்சை கழற்றிவிட்ட எடப்பாடி அடுத்து மோடியை கழற்றிவிடுவார். மோடி கவனமாக இருக்க வேண்டும். எடப்பாடி இப்படி மற்ற ஜாதியினரை கழற்றவிடுவதால் அவருக்கு 15 சதவிகிதம் வாக்கு மட்டுமே கிடைக்கும்.

எடப்பாடி

எடப்பாடி

இப்போது இரட்டை இலை சின்னம் பிரச்சசையில் இருக்கிறது. ஓபிஎஸ்ஸுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பு குறைவு. அவர் குஜராத்தில் போய் பாஜக தலைவர்களிடம் பேசி இருக்கலாம். ஆனால் அவருக்கு சின்னம் கிடைக்க வாய்ப்பு குறைவு. ஓபிஎஸ் கருத்தை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பு கொடுத்த கட்சி கணக்கு வழக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் ஓ பன்னீர்செல்வத்தை தேர்தல் ஆணையம் ஏற்காது என்பதே உண்மை, என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+