தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார்
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரம்மாண்ட கூட்டணி, அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளால் திமுக களத்தில் அடித்து ஆடிக் கொண்டிருக்கிறது. தேமுதிக அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில் தென் மண்டலத்தில் திமுகவை பலப்படுத்தும் டார்கெட்டுடன் ஓ. பன்னீர்செல்வம் இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம் இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். காலை 9 மணிக்கு தென்காசி தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம், கடையநல்லூர், இலஞ்சி, குற்றாலம், மேலகரம் சுந்தர பாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து, இன்று மாலை 4 மணியளவில் கடையநல்லூர் தொகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். (O Panneerselvam)

ஓபிஎஸ் பிரச்சாரம்
கடையநல்லூர் ஒன்றியம், அச்சன்புதூர் பண்பொழி பேரூர் பகுதிகளில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்யவுள்ளார். இன்று இரவு 7 மணியளவில் சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்கிறார். குருவிக்குளம், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர் ஒன்றியங்களில் அவர் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை 3 தொகுதிகள்
நாளை மார்ச் 14 ஆம் தேதி காலை 9 மணியளவில் வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்யவுள்ளார். சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஒட்னறியங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர், மாலை 4 மணியளவில் முதுகுளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். அங்கு கடலாடி, கமுதி, முதுகளத்தூர் ஒன்றியங்களில் பிரச்சாரம் செய்கிறார்.
நாளை மாலை 6 மணியளவில் பரமக்குடி (தனி) தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு நயினார்கோவில், பரமக்குடி நகரம் பகுதிகளில் பிரச்சாரம் செய்யவுள்ளார். நாளை இரவு 8 மணியளவில் திருவாடானை தொகுதியில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்கிறார். அங்கு ஆர்.எஸ் மங்கலம், திருவாடனை ஒன்றியங்களில் பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications