ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு.. திடீரென வைக்கப்பட்ட கோரிக்கை.. ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுடன், அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த மனுக்களையும் சேர்த்து நாளை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்கவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து தனி நீதிபதி கே. குமரேஷ் பாபு நேற்று முன் தினம் (மார்ச் 28) அளித்த தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அவற்றில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யும் வரை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மட்டும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மூவரின் தரப்பில், நீதிபதி குமரேஷ்பாபுவின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்களையும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் , அனைத்து மனுக்களையும் சேர்த்து நாளை விசாரிப்பதாக தெரிவித்து, ஒபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications