ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் மரணம் - முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் நேரில் அஞ்சலி
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவினால் காலமானார். மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு அதிமுகவினர், அரசியல் கட்சித்த
சென்னை: முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. ஒபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.
Recommended Video
ஓ.பன்னீர் செல்வத்திற்கு உறுதுணையாக பல கால கட்டங்களில் இருந்து வந்தவர் அவரது மனைவி விஜயலட்சுமி. மூன்றுமுறை முதல்வராகவும் ஒருமுறை துணை முதல்வராக பதவி வகித்த போது அவரது பல செயல்களில் உறுதுணையாக இருந்தவர் விஜயலட்சுமி. கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்தார் விஜயலட்சுமி.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நல பாதிப்பு அதிகரிக்கவே பெருங்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
விஜயலட்சுமியின் உடல் மருத்துவமனையில் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் அஞ்சலிக்குப்பின் ஓபிஎஸ் மனைவியின் உடல் நேரடியாக சொந்த ஊரான தேனி பெரியகுளத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறது. பெரிய குளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள ஓட்டக்கார தேவர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இறுதிச்சடங்குகள் பெரியகுளத்தில் நடைபெறும்.

தலைவர் நேரில் அஞ்சலி ஆறுதல்
கடந்த 2 வாரங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார் விஜயலட்சுமி. இன்று காலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்தார். .
ஓபிஎஸ் மனைவியின் உடல் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. முன்னார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர்கள் நேரில் வந்து ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மனைவியின் உடல் அருகே கண்ணீர் மல்க நின்றிருந்த ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறினார் இபிஎஸ்.
ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். ஓபிஎஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்ரமணியம், தங்கம் தென்னரசு, துரைமுருகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஓ.பன்னீர் செல்வத்தின் கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
முன்னாள் துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகன் கடந்த மே மாதம் புற்று நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த மே மாதம் சகோதரர் உடல் நலக்குறைவினால் உயிரிழந்த நிலையில் மூன்று மாதங்களில் மனைவியை பறிகொடுத்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். ஓ.பி.எஸ் மனைவியின் மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications