ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சொத்து மதிப்பு எவ்வளவு? வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வெளியானது ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சொத்து மதிப்பு- வீடியோ

    சென்னை: தேனி லோக்சபா தொகுதியில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்த நிலையில்தான் தேனி கலெக்டர் பல்லவி பல்தேவிடம், அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ரவீந்திரநாத் தாக்கல் செய்தார்.

    அப்போது தனது சொத்து விவரங்கள் மற்றும் குற்ற வழக்குகள் இருக்கின்றனவா என்பது போன்ற உறுதிமொழி பத்திரமும் வழங்கினார்.

    அதில் ரவிந்திரநாத் குறிப்பிட்ட சொத்து மதிப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

    வங்கி கணக்கு

    வங்கி கணக்கு

    தனது கையில் ரொக்கமாக 82 ஆயிரத்து 714 ரூபாய், தனது மனைவி கையில் 62 ஆயிரத்து 450 ரூபாய் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கி கணக்குகளை பொறுத்தளவில், சென்னை மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கியில் 14 லட்சத்து 73 ஆயிரத்து 63 ரூபாய், பெரியகுளம் சிட்டி யூனியன் வங்கியில் 24 லட்சத்து 99 ஆயிரத்து 410 ரூபாய் இருப்பு உள்ளதாம்.

    வங்கி கிளைகள்

    வங்கி கிளைகள்

    தனது மனைவிக்கு பெரியகுளம் ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் 41 ஆயிரத்து 307 ரூபாய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தனது மகன் ஜெய்தீப் பெயரில் சென்னை மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கி கிளையில் 1.63 லட்சத்து 153 ரூபாய், மகள் ஜெயஸ்ரீ பெயரில் அதே வங்கியின் கிளையில் 1.61 லட்சத்து 67 ரூபாய் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    பங்குகள்

    பங்குகள்

    ரிலையன்ஸ் மணியில் 56 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்புள்ள பங்குகளும், விஜயானந்த டெவலப்பர்ஸ் பிரைவேட் நிறுவனத்தில் 33 ஆயிரத்து 340 ரூபாய் மதிப்புள்ள பங்குகளும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுபோல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மீட்டர் இன்சூரன்ஸில் 8 லட்சத்து 89 ஆயிரத்து 575 ரூபாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தன்னிடம் 6 லட்சத்து 37 ஆயிரத்து 992 ரூபாய் மதிப்புள்ள ஹூண்டாய் ஐ10 கார் மற்றும் 36 லட்சத்து 52 ஆயிரத்து 450 ரூபாய் மதிப்புள்ள டொயோட்டா கார் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தங்க நகைகள்

    தங்க நகைகள்

    ரவீந்திரநாத் குமாரிடம் 120 கிராம் தங்கமும், 1.1 கிலோ வெள்ளியும், அவரது மனைவியிடம் 76வது கிராம் தங்கமும், 4.75 கிலோ வெள்ளியும், 10 கேரட் வைரம் அவரது மகன் ஜெயந்த்திடம், 120 கிராம் தங்கமும், மகள் ஜெயஸ்ரீயிடம், 300 கிராம் தங்கமும் மகன் ஆதித்யாவிடம் 120 கிராம் தங்கமும் இருப்பதாக சொல்லி உள்ளார். இப்படி ரவீந்திரநாத் குமாரிடம் இருக்கும் அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு 4 கோடியே 16 லட்சத்து 27 ஆயிரத்து 24 ரூபாய், அவரது மனைவி பெயரில் 31 லட்சத்து 58 ஆயிரத்து 506 ரூபாய், மகன் ஜெய்தீப் 5 லட்சத்து 23 ஆயிரத்து 256 ரூபாய், மகள் ஜெயஸ்ரீ பெயரில், 10 லட்சத்து 60 ஆயிரத்து 67 ரூபாய், மகன் ஆதித்யா 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அசையா சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

    கட்டுமான மதிப்பு

    கட்டுமான மதிப்பு

    விவசாய நிலமாக ரவீந்திரநாத் குமாரிடம் பெரியகுளம் மற்றும் தாமரை குளம் ஆகிய கிராமங்களில் 31.37 ஏக்கர் நிலம் உள்ளதாம். அனைத்தும் 2011ஆம் ஆண்டு வாங்கப்பட்டதாகவும், அந்த நிலத்தில் 15 லட்சம் மதிப்பிலான கட்டுமானம் செய்திருப்பதாகவும், தற்போது அதன் மதிப்பு தோராயமாக ஒரு கோடியே 90 லட்சத்து 73 ஆயிரத்து 136ரூபாய் எனவும் தனக்கு பூர்வீக சொத்து இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    கடன் தொகை

    கடன் தொகை

    அதேபோல் வங்கிகள் மற்றும் தனிநபர்கள் இடம் வாங்கிய கடன் மற்றும் செலுத்த வேண்டிய தொகை 3 கோடியே 28 லட்சத்து 34 ஆயிரத்து 79 ரூபாய் என குறிப்பிட்டுள்ளார். அதில் தனது தம்பி பிரதீப்புக்கு 33 லட்சத்து 3 ஆயிரத்து 131 56 ரூபாய், தனது தாய் விஜயலட்சுமிக்கு ரூ.83 லட்சத்து 10,000 கடன் செலுத்த வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+