900 சீட்..இப்போ தேடி என்ன பிரயோஜனம்? ‘இதை’ அப்பவே செய்திருக்கனும்..! அதொஉமீகு ஓபிஎஸ் சொன்ன விஷயம்!
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்காத தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதொஉமீகு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாட்டில் அதிக மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 24 மருத்துவக் கல்லூரிகள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்டன.
திமுக ஆட்சி: இதற்கு முற்றிலும் எதிரான நிலை கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிலவுகிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண். 164-ல், மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தி.மு.க. அரசு உருவாக்கும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும், ஒரு அரசு மருத்துவக் கல்லூரியைக் கூட உருவாக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
மருத்துவக் கல்லூரி: ஆனால், 99 விழுக்காடு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கூறுகிறார். ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை துவங்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளாகியும் இதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.
900 இடங்கள்: இப்பொழுதுதான், மேற்படி ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரியை அமைக்க 25 ஏக்கர் நிலத்தை தேடும் பணியில் தி.மு.க. ஈடுபட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்தவுடனேயே இதற்கான பணியை மேற்கொண்டிருந்தால், தற்போது ஆறு மருத்துவக் கல்லூரிகள் உருவாகி, அதன்மூலம் கிட்டத்தட்ட 900 மருத்துவ இருக்கைகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்து இருக்கும். இதைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. இதன்மூலம், 900 ஏழையெளிய மாணவ, மாணவியர் மருத்துவராவது தடுக்கப்பட்டு இருக்கிறது.
திறமற்ற மாடல்: புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஒவ்வொரு ஆண்டு நவம்பர் மாதம் என்றிருக்கின்ற நிலையில், இனி மேல் நிலத்தை கண்டுபிடித்து. கையகப்படுத்தி, விண்ணப்பிப்பது என்பது இயலாத காரியம். தி.மு.க.வின் மெத்தனப் போக்கினைப் பார்க்கும்போது, அடுத்த ஆண்டாவது ஆறு மருத்துவக் வக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்குமா எடுக்குமா என்பது சந்தேகம்தான். இந்த நிலை நீடித்தால், இந்த ஐந்து ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியும் தமிழ்நாட்டிற்கு கிடைக்காது. தி.மு.க.வின் திறமையின்மைக்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு. ஒரு வேளை திறமற்ற மாடல் என்பதுதான் திராவிட மாடலின் பொருள் போலும்.
கோரிக்கை: ஏழையெளிய மாணவ, மாணவியர் அதிகளவில் மருத்துவராக வேண்டுமானால், அதற்கு ஒரே வழி அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும். இதனை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மனதில் நிலைநிறுத்தி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications