விடாத ஓ பன்னீர்செல்வம்! சரியாக எடப்பாடி கூட்டம் நடத்தும் நாளில்.. அஸ்திவாரத்திலேயே ஷாக் தரும் ஓபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை; எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக கோவையில் மாநாடு நடத்த ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவையில் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக இன்று ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை செய்ய உள்ளார்.

தனது ஆதரவு நிர்வாகிகள், செயலாளர்களுடன் ஓ பன்னீர்செல்வம் இன்று சென்னையில் ஆலோசனை செய்ய உள்ளார். அதிமுக சார்பாக மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை சீர்குலைப்பதற்கான ஏற்பாடுகளை ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக செய்து வருகிறாராம். எடப்பாடி கூட்டம் நடத்தும் அதே நாளில் , அதாவது இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓ பன்னீர்செல்வம் நடத்துகிறார்.

O Panneerselvam to hold a meeting in Chennai ahead of AIADMK Madurai meeting today

கோவையில் கூட்டம் நடத்துவது தொடர்பாகவும் இன்று ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட உள்ளார். இன்னொரு பக்கம் அதிமுக சார்பாக மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை சீர்குலைப்பதற்கான ஏற்பாடுகளை ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக செய்து வருகிறாராம்.

அதன்படி எடப்பாடி பழனிசாமியின் இந்த மதுரை மாநாட்டிற்கு செக் வைக்க ஓ பன்னீர்செல்வம் -டிடிவி தினகரன் ஆகியோர் முக்கிய திட்டம் ஒன்றை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மதுரை மாநாட்டிற்கு முக்குலத்தோர் பிரிவினர் செல்ல கூடாது என்று லாபி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளார்களாம்.

முக்கியமாக எடப்பாடி பழனிசாமி முக்குலத்தோருக்கு மதிப்பு கொடுக்கவில்லை. மேற்கு மண்டல ஜாதியினருக்கு மட்டும் ஆதரவு கொடுக்கிறார். ஓபிஎஸ் - சசிகலா - டிடிவி ஆகியோரை ஓரம்கட்டிவிட்டார். ஆர் பி உதயகுமாரை மட்டுமே வைத்துள்ளார். அவர் நடத்தும் மாநாட்டிற்கு செல்ல கூடாது என்று என்று லாபி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீங்கள் சென்றால் அது நம்முடைய குலத்திற்கே இலுக்காக இருக்கும். அப்படி செய்ய வேண்டாம். அவர் தேவர் சிலைக்கு மரியாதை செய்வார். தேவருக்கு பூஜை செய்வார். இதெல்லாம் சின்ன சின்ன ஸ்டண்ட். இதை எல்லாம் பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அவர் அதிகார ரீதியாக தேவர்கள், முக்குலத்தோர் யாரையும் தனக்கு பக்கத்திலேயே வைக்கவில்லை. அதனால் அவருக்கு ஆதரவு தருவது வேஸ்ட் என்று ஓபிஎஸ் சொல்லி வருகிறாராம்.

இதனால் இன்று நடக்கும் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு முக்குலத்தோர் செல்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதிமுக கூட்டம்: அதிமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று மதுரையில் நடைபெறுகிறது. இன்று காலை கொடியேற்றி கூட்டத்தை தொடங்கி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆன பின் நடக்கும் முதல் பெரிய பொதுக்கூட்டம் இது. மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்த கூட்டம். நடக்கிறது. கிட்டத்தட்ட 63 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

2 லட்சம் பேர் கலந்து கொள்ளும் விதமாக இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து உள்ளன. கூட்டத்திற்கு வரும் மக்கள் பலர் நேற்றே இதற்காக மதுரை வந்து சேர்ந்தனர். மதுரையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றி கூட்டத்தை தொடங்கி வைப்பார்.

அதன்பின் இன்று காலை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கும். அதை தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் தலைவர்கள் உரை நிகழ்த்துவார்கள். 6 மணிக்கு எடப்பாடி பழனிசாமி உரை நிகழ்த்துவார். 7. 30 மணிக்கு முன்பாக நிகழ்வுகள் முடிந்து உணவு வழங்கப்படும்.

இன்று மூன்று வேளையும் சைவம் மற்றும் அசைவ உணவுகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து முடித்துள்ளன. கிட்டத்தட்ட 3 ஆயிரம் சமையல் கலைஞர்கள் சேர்ந்து இந்த முறை உணவு தயார் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+