நாங்களும் இருக்கோம்! குளறுபடிகளின் மொத்த உருவம் திமுக அரசு! குரல் உயர்த்தும் ஓ.பன்னீர்செல்வம்!
நிர்வாகத் திறமையற்ற அரசு திமுகஅரசு என ஓபிஎஸ் விமர்சனம்.
சென்னை: குளறுபடிகளின் மொத்த உருவமாக திமுக அரசு திகழ்கிறது என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
குரூப் 2, 2ஏ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர் விடுத்துள்ள அறிக்கையில் திமுக அரசை இவ்வாறு விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள பதிவு வருமாறு;

குளறுபடி அரசு
நகைக் கடன் வழங்கியதில் குளறுபடி, ஆவின் நிறுவனத்தில் குளறுபடி, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் குளறுபடி, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கியதில் குளறுபடி, பொங்கல் தொகுப்பு வழங்கியதில் குளறுபடி என்ற வரிசையில் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நேற்று நடத்தப்பட்ட குரூப்-2, 26ஏ முதன்மைத் தேர்வில் வினாத்தாள் வழங்கியதில் குளறுபடி என குளறுபடிகளின் மொத்த உருவமாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம், முன்யோசனையற்ற, திட்டமிடலற்ற, நிர்வாகத் திறமையற்ற அரசு தி.மு.க. அரசு என்பது தெள்ளத் தெளிவாகிறது.

குரூப் 2 தேர்வு
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பெரிய அளவில் குரூப் 4-ல் சுமார் 9,000 காலிப் பணியிடங்களுக்கும், குரூப்-2, 2ஏ -ல் சுமார் 5,500 காலிப் பணியிடங்களுக்கும் அறிவிக்கைகள் அறிவிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையில், குரூப்-4 தேர்வுகளுக்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த மாதம், அடுத்த மாதம் என முடிவுகள் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன.

தாமதமாக தேர்வு
அதே சமயத்தில், குரூப்-2, 2ஏ -ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான பூர்வாங்கத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, முதன்மைத் தேர்வுகள் நேற்று நடத்தப்பட்ட நிலையில், பெரும்பாலான தேர்வு மையங்களில் தேர்வுகள் தாமதமாக துவங்கப்பட்டதாகவும், வினாத்தாளின் வரிசை எண்கள் மாறியிருந்ததன் காரணமாக சில மையங்களில் தேர்வு எழுதுவோரிடம் வினாத் தாள்கள் வழங்கப்படவில்லை என்றும், சில மையங்களில் கொடுக்கப்பட்ட வினாத் தாள்கள் திரும்பப் பெறப்பட்டதாகவும், இவ்வாறு வினாத் தாள்கள் திரும்பப் பெறப்பட்ட மையங்களில் தேர்வு எழுதுவோர் கைபேசி மூலம் விடைகளை கண்டுபிடித்ததாகவும் தகவல்கள் வருகின்றன.

வாய்ப்பு இல்லை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் எவ்வளவு நேரம் தாமதமாக துவங்கப்பட்டதோ அவ்வளவு நேரம் கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலான மையங்களில் 9-30 மணிக்கு துவங்கப்பட வேண்டிய தேர்வு 11-00 மணி வரை துவங்கப்படாததால் தேர்வு எழுதுவோர் மத்தியில் ஒரு விதமான பதற்றம் நிலவியது. மேலும், மதியம் எழுத வேண்டிய பிரதான தேர்விற்கு திரும்பவும் மேலோட்டமாக படிக்கக்கூடிய வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.

தேர்வாக கருத முடியாது
இந்தத் தேர்வினை சமமாக நடத்தப்பட்ட தேர்வாக கருத முடியாது. ஒரு சாரார் பதற்றத்துடன் தேர்வு எழுதுவதும், அவர்களுக்கு மதியத் தேர்விற்கு படிக்கும் நேரம் பறிக்கப்படுவதும் ஒருதலைபட்சமான ஒன்று. தேர்வு நடத்தியதில் பெருமளவுக்கு குழப்பத்தைபொறுப்பேற்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையில், குரூப்-4 தேர்வுகளுக்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த மாதம், அடுத்த மாதம் என முடிவுகள் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில், குரூப்-2, 2ஏ -ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான பூர்வாங்கத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, முதன்மைத் தேர்வுகள் நேற்று நடத்தப்பட்ட நிலையில், பெரும்பாலான தேர்வு மையங்களில் தேர்வுகள் தாமதமாக துவங்கப்பட்டதாகவும், வினாத்தாளின் வரிசை எண்கள் மாறியிருந்ததன் காரணமாக சில மையங்களில் தேர்வு எழுதுவோரிடம் வினாத் தாள்கள் வழங்கப்படவில்லை என்றும், சில மையங்களில் கொடுக்கப்பட்ட வினாத் தாள்கள் திரும்பப் பெறப்பட்டதாகவும், இவ்வாறு வினாத் தாள்கள் திரும்பப் பெறப்பட்ட மையங்களில் தேர்வு எழுதுவோர் கைபேசி மூலம் விடைகளை கண்டுபிடித்ததாகவும் தகவல்கள் வருகின்றன.

சமவாய்ப்பு இல்லை
இந்தத் தேர்வில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. எனவே, இந்தத் தேர்வினை சமமாக நடத்தப்பட்ட தேர்வாக கருத முடியாது. ஒரு சாரார் பதற்றத்துடன் தேர்வு எழுதுவதும், அவர்களுக்கு மதியத் தேர்விற்கு படிக்கும் நேரம் பறிக்கப்படுவதும் ஒருதலைபட்சமான ஒன்று. தேர்வு நடத்தியதில் பெருமளவுக்கு குழப்பத்தைமுடியாது. அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், குருப்-2, 2ஏ பிரதானத் தேர்வினை ரத்து செய்து விட்டு மறு தேர்வு நடத்தப்படுவதே பொருத்தமாக இருக்கும். இதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஒளிமயமான எதிர்காலம்
இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு, குரூப் 2, 2ஏ பிரதானத் தேர்வினை ரத்து செய்துவிட்டு, விரைவில் மறு தேர்வினை எந்தவித குளறுபடிக்கும் இடம் அளிக்காமல் நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications